இயற்கையான முறையில் மேனி அழகை அதிகரிக்கும் குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளது.
*மிருதுவான சருமம்
ஆலிவ் எண்ணையை சருமத்திற்கு அப்ளை செய்து குளித்து வந்தால் தோல் மிருதுவாகவும்,அழகாகவும் இருக்கும்.
*பொலிவான முகம்
அரிசி மாவில் தேங்காய் எண்ணெய் ஊற்றி குழைத்து சருமத்தில் பூசி 10 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் பொலிவாக இருக்கும்.
*உதடு வறட்சி
பிரஸ் கற்றாழை ஜெல்லில் சர்க்கரை சேர்த்து உதடுகளின் மீது அப்ளை செய்து வந்தால் உதடு வறட்சியாவது தடுக்கப்படும்.
*கழுத்து கருமை
கழுத்தை சுற்றியிருக்கும் கருமையை போக்க அரிசி மாவில் எலுமிச்சை சாறு கலந்து ஸ்க்ரப் செய்யலாம்.
ஒரு காட்டன் துணியில் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கழுத்தை சுற்றி தேய்த்தால் கருமை வந்துவிடும்.
*நக சொத்தை
பூண்டு மற்றும் எலுமிச்சை சாறை அரைத்து சொத்தையான நகங்களில் மீது அப்ளை செய்து வந்தால் அவை சீக்கிரம் பழைய நிலைக்கு மாறும்.
*அக்குள் துர்நாற்றம்
ரோஜா இதழை அரைத்து சந்தனத் தூள் மற்றும் பசும் பால் சேர்த்து குழைத்து அக்குள் பகுதியில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் கட்டுப்படும்.
*பிறப்புறுப்பு துர்நாற்றம்
கற்றாழை ஜெல் மற்றும் தயிரை ஒன்றாக மிக்ஸ் செய்து பிறப்புறுப்பு பகுதியில் தடவினால் துர்நாற்றம் வீசுவது கட்டுப்படும்.
*முகப்பரு
செம்பருத்தி பூவை அரைத்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு பிரச்சனை சரியாகும்.
வேப்பிலை மற்றும் மஞ்சளை அரைத்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகத்தில் உள்ள அமுங்கி சரியாகிவிடும்.
*தோல் வறட்சி
தேங்காய் எண்ணெய்,வேப்பிலை பேஸ்ட்,மஞ்சள் தூளை நன்கு மிக்ஸ் செய்து தோலில் பூசி குளித்து வந்தால் வறட்சி ஏற்படுவது கட்டுப்படும்.
*மூட்டு கருமை
அரிசி மாவு மற்றும் மஞ்சள் தூளை பேஸ்ட் பதத்திற்கு மிக்ஸ் செய்து கை மற்றும் கால் மூட்டுகளில் அப்ளை செய்து ஸ்க்ரப் பண்ண வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கை மற்றும் கால் மூட்டு கருமை மறைந்துவிடும்.
*அடர்த்தியான கண் புருவம்
விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணையை மிக்ஸ் செய்து கண் புருவங்கள் மீது தடவி வந்தால் அவை அடர்த்தியாக வளரும்.
*முன் நெற்றி முடி உதிர்வு
சின்ன வெங்காய சாறை முன் நெற்றிப் பகுதியில் அப்ளை செய்து வந்தால் சில வாரங்களில் பேபி ஹேர் வளரும்.
*பொடுகு
வேப்ப எண்ணையில் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகுப் பிரச்சனை சரியாகும்.