தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் வெளிநாடுகளில் ஓடிடி தளத்தில் புகழ் பெற்ற டெண்ட்கோட்டா நிறுவனமும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.வெளிநாடுகளில் புகழ் டெண்ட்கோட்டா ஓடிடி தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும் தனது சேவையை தொடங்க இருக்கிறது.
தமிழ் திரைப்பட சங்கம்மும், டெண்ட்கோட்டாவும் இணைத்து, திரைப்பட சங்க உறுப்பினர்களுக்கு பயன் தரும் வகையில், ஒரு ஒப்பந்தத்தை தற்போது செய்து உள்ளனர்.இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, தமிழ் திரைப்பட சங்கம் பரிந்துரை செய்யும், அவர்களின் உறுப்பினர்களின் புதிய திரைப்படங்களை, திரைப்படங்களின் தகுதியைப் பொறுத்து டெண்ட்கோட்டா ஓடிடி நிறுவனம் மொத்தமாக விலை கொடுத்தோஅல்லது குறைந்தபட்ச உத்தரவாதமாக ஒரு விலை கொடுத்தோ அல்லது வருவாயில் பங்கு கொடுத்தோ, திரைப்பட சங்க உறுப்பினர்களின் படங்களை டெண்ட்கோட்டா ஓடிடி வாங்கவுள்ளது
திரைப்பட சங்கம் பரிந்துரைக்கும் அனைத்து புதிய திரைப்படங்களையும் மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒரு முறையில் டெண்ட்கோட்டா ஓடிடி வாங்கும் என்று உறுதி அளித்துள்ளது. தனது உறுப்பினர்களின் புதிய திரைப்படங்களை டெண்ட்கோட்டா ஓடிடி நிறுவனத்திற்கு பரிந்துரைப்பதுடன், சங்கத்தின் செயல் முடியும்.திரைப்பட சங்கம் மற்றும் டெண்ட்கோட்டா ஓடிடி -க்கும் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் 5 வருட காலத்திற்கு செயல்பாட்டில் இருக்கும்.வாரத்திற்கு ஒரு புதிய திரைப்படம் என்கிற முறையில் திரைப்பட சங்கம், 52 புதிய திரைப்படங்களை டெண்ட்கோட்டா ஓடிடி-க்கு பரிந்துரைக்கும்.
இந்த ஒப்பந்தம் குறித்து, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் செயல் தலைவர் திரு. T.G. தியாகராஜன் தன் மகிழ்ச்சியை தெரியப்படுத்தி, இந்த ஒப்பந்தம் மூலம் ஒவ்வொரு வருடமும், வாரம் ஒரு உறுப்பினர் படம் என்கிற முறையில் 52 உறுப்பினர்கள் பயன் பெற முடியும், அதுவும் குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் திரைப்பட தயாரிப்பாளர்கள் என்று குறிப்பிட்டார்.டெண்ட்கோட்டா ஓடிடி- வின் இயக்குனர் திரு. முருகேசன்கணேசன் இந்த ஒப்பந்தம் தங்களது ஓடிடி பயணத்தில் ஒரு புதிய தொடக்கமாக இருக்கும்.
தமிழ் சினிமாவின் முக்கிய சங்கமான தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் பரிந்துரைக்கும் புதிய திரைப்படங்களை எங்களின் டெண்ட்கோட்டா ஓடிடி தளம் மூலம் வெளியிடுவதில் பெரிதும் மகிழ்ச்சி கொள்வதாக கூறினார்.தளம் வெகு விரைவில் இந்தியாவில் தனது சேவையை தொடங்க இருக்கிறது. திரைப்பட சங்கம் தனது தயாரிப்பாளர் உறுப்பினர்களின் திரைப்படங்களை இந்த புத்தாண்டு முதல் டெண்ட்கோட்டா ஓடிடி தளத்திற்கு பரிந்துரைக்க ஆரம்பிக்கும்.