ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டம் சோப்பூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட மத்திய ரிசர்வ் படையினர் வாகனத்தில் இருந்து இறங்கியபோது, அங்கிருந்த மசூதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் இவர்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்தார். இதே நேரத்தில் முதியவர் ஒருவர் ஸ்ரீநகரில் இருந்து கார் மூலம் தனது 3 வயது பேரனுடன் சென்று கொண்டிருந்தார்.
தீவிரவாதிகள் தாக்குதலை கவனித்த உடனே காரை நிறுத்திவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல முயன்றார். இதனிடையே நடந்த தாக்குதலில் முதியவர் குண்டுபட்டு உயிரிழந்ததை அறியாத குழந்தை கதறி அழுதுகொண்டு இருந்தது. பின்னர் குழந்தையை சிஆர்பிஎப் வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்த படம் காஷ்மீர் போலீசார் டுவிட்டர் பக்கத்தில் பாதித்துள்ளனர்.
இந்திய எல்லை பகுதியில் 400 மீட்டர் ஊடுருவ நினைத்த பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் மீது நடத்திய அதிரடி தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. மேலும் தீவிரவாத ஊடுருவல் இருக்கிறதா என வீரர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர்.