கெமிக்கல் சோப் வேண்டாம்.. சருமத்தை மிருதுவாக்க நலுங்கு மாவு பயன்படுத்துங்கள்!!

0
76

தங்கள் சரும அழகை மேம்படுத்த,வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த தினமும் நலுங்கு மாவு பூசி குளிங்க.

நலுங்கு மாவு செய்ய தேவைப்படும் பொருட்கள்:-

1)கடலை பருப்பு – 20 கிராம்
2)வெட்டி வேர் – 20 கிராம்
3)காய்ந்த ரோஜா இதழ் – கால் கப்
4)காய்ந்த ஆரஞ்சு பழத் தோல் – கால் கப்
5)காய்ந்த துளசி – கால் கப்
6)காய்ந்த வேப்பிலை – நான்கு கொத்து
7)சந்தனத் தூள் – இரண்டு தேக்கரண்டி
8)நெல்லிக்காய் வற்றல் – கால் கப்
9)கஸ்தூரி மஞ்சள் கிழங்கு – ஒன்று
10)ஓமம் – இரண்டு தேக்கரண்டி

நலுங்கு மாவு செய்முறை விளக்கம்:-

**முதலில் வாணலியில் கடலை பருப்பு போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து இரண்டு தேக்கரண்டி ஓமத்தை அதில் போட்டு வாசம் வரும் வறுக்க வேண்டும்.பின்னர் ஒரு கஸ்தூரி மஞ்சள் கிழங்கை அதில் போட்டு வறுக்க வேண்டும்.

**பின்னர் துளசி.வேப்பிலை,ரோஜா இதழ்,நெல்லிக்காய் வற்றல்,ஆரஞ்சு தோல்,வெட்டி வேர் போன்றவற்றை உலர்த்திய நிலையில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் போட்டு வத்தல் பதத்திற்கு காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

**அதேபோல் ஆரஞ்சு பழத் தோலை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

**வறுத்த மற்றும் காய வைத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை ஜல்லடை கொண்டு சலித்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு இதை டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் இந்த நலுங்கு மாவு பொடி தேவையான அளவு சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.

**இதை உடலில் பூசி நன்கு தேய்த்து குளிக்க வேண்டும்.இந்த நலுங்கு பொடியை பயன்படுத்துவதால் உடல் துர்நாற்றம் கட்டுப்படும்.உடலில் அழுக்கு மற்றும் வியர்வை சேர்வது கட்டுப்படும்.

**இரசாயன சோப்பிற்கு பதில் இந்த நலுங்கு மாவு பொடியை பயன்படுத்தி குளித்து வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.தாங்கள் விருப்பப்பட்டால் இந்த ஏலக்காய்,பச்சை கற்பூரம்,பாசி பயறு உள்ளிட்ட பொருட்களை சேர்த்து நலுங்கு மாவு அரைத்து பயன்படுத்தலாம்.

Previous articleபிரசவ வலி குறைய.. தாய்ப்பால் சுரக்க உதவும் லேகியம்!! தினம் ஒரு உருண்டை சாப்பிடுங்கள்.. மொத்த பிரச்சனையும் சரியாகிவிடும்!!
Next articleஓபிஎஸ்+ரஜினி.. பாஜக-வின் மாஸ்டர் பிளான்!! செல்லா காசா போகும் எடப்பாடி!!