ஹோம்மேட் பவர்புல் கொசுவர்த்தி!! இதற்கு வீட்டில் உள்ள இந்த பொருட்களே போதும்!!

0
89

மழை,பனி,வெயில் என்று அனைத்து பருவ காலங்களிலும் பெரும் தொல்லையாக இருப்பது கொசுக்கள் தான்.இதனை விரட்ட வீட்டில் இருக்கின்ற கொண்டு கொசுவர்த்தி தயாரித்து பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

*காய்ந்த மலர்கள் – ஒரு கப்
*வேப்பிலை – கால் கப்
*வேப்ப எண்ணெய் – மூன்று தேக்கரண்டி
*இலவங்கம் – பத்து
*பட்டை துண்டு – இரண்டு
*கற்பூரம்(சூடம்) – இரண்டு
*கம்ப்யூட்டர் சாம்பிராணி – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்

1.முதலில் ரோஜா,முல்லை,மல்லி,சாமந்தி போன்ற மலர்களை சேகரித்து வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.பூஜைக்கு பயன்படுத்திய பூக்கள் இருந்தாலும் இதற்கு பயன்படுத்தலாம்.

2.அதேபோல் கால் கப் அளவிற்கு வேப்பிலையை வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

3.அடுத்து பத்து கிராம்பு மற்றும் இரண்டு இலவங்கப்பட்டையை வாணலியில் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

4.அதன் பின்னர் மிக்சர் ஜாரை எடுத்து காய வைத்த மலர்கள்,வேப்பிலையை போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.இதை ஒரு தட்டில் கொட்டி வைக்க வேண்டும்.

5.பின்னர் வறுத்து வைத்துள்ள இலவங்கம் மற்றும் பட்டை துண்டுகளை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

6.பிறகு சூடம் அதாவது கற்பூரம் மற்றும் சாம்பிராணி கட்டியை இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.

7.இப்பொழுது பாத்திரம் ஒன்றை எடுத்து வைத்து அதில் அரைத்த பொடிகள் அனைத்தையும் போட்டு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

8.பிறகு அதில் மூன்று தேக்கரண்டி வேப்ப எண்ணெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.

9.அடுத்து கொழுக்கட்டை போல் கைகளில் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் தோசைக் கல் ஒன்றை வைத்து சூடாக்கி தயார் செய்து வைத்துள்ள கலவையை அதில் வைத்து லேசாக சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

10.பின்னர் இதை ஆறவிட்டு ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.இந்த ஹோம்மேட் கொசுவர்த்தியில் ஒன்றை எடுத்து பற்ற வைத்து வீடு முழுவதும் புகை மூட்டவும்.இவ்வாறு செய்தால் கொசுக்கள் நடமாட்டம் சீக்கிரம் குறைந்துவிடும்.

Previous articleOYO ஹோட்டலின் புதிய விதிமுறைகள்!! இனி இவர்களுக்கு அனுமதி இல்லை!!
Next articleஒரே ஒரு தக்காளி போதும்.. எப்பேர்ப்பட்ட கண் கருவளையமும் மாயமாய் மறைந்து போகும்!!