Rajinikanth: ரஜினியை வைத்து அரசியல் மெகா கூட்டணியை உருவாக்குவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமாக உள்ளது. சமீபத்தில் பன்னீர்செல்வம், நாம் தமிழர் சீமான் உள்ளிட்டவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து வருகிறார். இவர்கள் அனைவரும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும் அரசியல் பார்வையில் வேறு பேச்சு தான் அடிபடுகிறது.
ரஜினி பாஜகவிற்கு தனது முழு ஆதரவையும் மறைமுகமாக கொடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில் திமுக கூட்டணியை உடைக்க வேண்டும். மேற்கொண்டு சட்டமன்ற தேர்தலில் அவர்களின் தலை ஓங்கி விடக் கூடாது என எண்ணுகிறார். இதனை மையமாக வைத்து தான் தற்சமயம் மாற்று கட்சி தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
சமீபத்தில் இரட்டை இலை வழக்கு அனல் பறக்க சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென்று பன்னீர் செல்வத்தை சந்தித்தார். இதில் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் அதன் பாதிப்பு திமுகவிற்கு எந்த வகையில் இருக்கும் என்பதெல்லாம் பற்றி விசாரணை செய்ததாக தகவல்கள் வெளியானது. அப்படி இருக்கும் பொழுது சட்டமன்றத் தேர்தலில் பாஜகவில் ஒரு முக்கிய இடத்தை ரஜினிகாந்த் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றின் வெளிப்பாடு தான் தற்பொழுது நடந்து முடிந்த திருவள்ளுவர் நிகழ்ச்சியின் போது தமிழக அரசு சார்பாக ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்துவிட்டார். இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி தனது சமீபத்திய படப்பிடிப்பு குறித்து பேசினார்.
மேற்கொண்டு அரசியல் சார்ந்த கேள்வி கேட்ட பொழுது, நான் முன்னதாகவே சொல்லி விட்டேன் இது குறித்து எந்த கேள்வியும் கேட்க கூடாது என காட்டமாக கூறி அந்த இடத்தை விட்டு புறப்பட்டார்.