சுமார் 13 வருடங்களுக்கு முன் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளிவந்த படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மேலும்,சுந்தர் சி குருவான மணிவண்ணனின் கடைசி திரைப்படம். மறைந்த மனோபாலாவும் அத்திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் 2013 பொங்கலுக்கு ரிலீசாகும் என்ற கணக்கில் எடுக்கப்பட்டது.
சில பிரச்சினைகள் காரணமாக ரிலிஷாகாத நிலையில் சமீபத்தில் 2025 பொங்கலுக்கு ரிலீசாகும் என படக்குழு வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, சமீபத்தில் இதன் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் விஷால், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மற்றும் இயக்குனர் சுந்தர் சி ஆகியோருடன் தொகுப்பாளர் டிடியும் கலந்து கொண்டு பேசினார்கள்.
ஆக்சன் ஹீரோவாக பார்த்த விஷால் கை, கால் நடுக்கத்துடன் அந்நிகழ்வில் காணப்பட்டார். அவர் வைரஸ் காய்ச்சலால் பாதிப்படைந்து, உடல் நலம் சோர்வாக இருந்தாலும் பட பிரமோஷனுக்கு வந்துள்ளார் என கூறியிருந்தார் தொகுப்பாளர் டிடி. இது தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் பகிரப்பட்டு வருகிறது. ஆக்சன் ஹீரோவாக பார்த்த விஷாலை இப்படி பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிகழ்வை பற்றி தான் பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா பின்வருமாறு கூறியுள்ளார். புட்டி, குட்டி சகவாசம் அதிகமாகியிருக்கும். குடி அதிகமானால் தான் நாடி, நரம்புகள் செயலிழந்து இவ்வாறு கை, கால் நடுங்கும். வைரல் ஃபீவர் என்று பொய் சொல்கிறார் தொகுப்பாளர். நம்மளுக்கு எல்லாம் காய்ச்சல் வந்ததில்லையா? அப்படி ரொம்ப முடியவில்லை என்றால் நிகழ்ச்சிக்கு வராமல் இருந்திருக்கலாமே! என்றெல்லாம் கூறியுள்ளார்.