கலைமாமணி விருது வாங்கிய பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு!! இரங்கல் தெரிவித்த திரையுலக பிரபலங்கள்!!

0
93
Kalaimamani award-winning singer Jayachandran passes away!! Celebrities who expressed their condolences!!
Kalaimamani award-winning singer Jayachandran passes away!! Celebrities who expressed their condolences!!

பிரபல பிண்ணனி பாடகர் பி. ஜெயச்சந்திரன் நேற்று( ஜனவரி 9, 2025 ) தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் புற்றுநோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இவர் கேரளாவில் எர்ணாகுளத்தில் பிறந்தவர். சிறுவயதில் இருந்தே இசை மீது கொண்ட ஆர்வத்தால் ஜண்டா மற்றும் மிருதங்கம் ஆகியவற்றை இளம் வயதிலேயே முறையாக கற்றுக் கொண்டார். எம். எஸ்.விஸ்வநாதன் முதல் ஏ.ஆர். ரகுமான், ஜிவி பிரகாஷ் ஆகியவர்கள் வரை இவர் இணைந்து பணியாற்றியுள்ளார். ஐந்து தலைமுறைக்கும் மேல் பாடல்களை இயற்றி வந்துள்ளார். 1970 களில் இவர் பாடல் பாட ஆரம்பித்துள்ளார்.

இவர் பாடிய பாடல்களும் சில பின்வருமாறு, ‘கத்தாழங் காட்டு வழி’, ‘மயங்கினேன் சொல்ல தயங்கினேன்’, ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போல ஆடுது’, ‘கொடியிலே மல்லிகை பூ’, ‘என் மேல் விழுந்த மழைத்துளியே’, ‘சொல்லாமலே யார் பார்த்தது’ ஆகிய பிளாக் பஸ்டர் பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடல்கள் இன்றளவும், காலத்தால் அழியாமல் இருக்கின்றன. இவர் மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு வயது 81. இவர் ஐந்து கேரள மாநில விருதுகளையும், கேரளாவில் உயரிய விருதுதான “ஜேசி டேனியல்” விருதையும் பெற்றுள்ளார். மேலும், தமிழகத்தில் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவர் இறந்த செய்தியை கேட்ட வைரமுத்து, “கண்கள் கணக்கின்றன” என்ற கவிதையோடு, இவரை ஏழைகளின் ஏசுதாஸ் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இவரது இறப்பிற்கு திரைப்பட பிரபலங்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleதிடீரென தலைநகரை மாற்றிய ஈரான்.. வெளியான அதிரடி முடிவு!! காரண பின்னணி என்ன??
Next articleஇரண்டு கழகங்களிலும் “சார்கள்” அதிகம் என்று மக்களுக்குப் புரிந்துவிட்டது!! இணையத்தில் பரவும் மீம்ஸ்கள்!!