தற்பொழுது மார்கழி மாதத்தின் இறுதி நாள் நெருங்கிவிட்டது.மார்கழி மாதத்தின் கடைசி நாள் அன்று போகி அதாவது காப்புக்கட்டு நாள் கொண்டாடப்படுகிறது.இந்த பண்டிகை ஆங்கில மாதத்தில் ஜனவரி 13 அதாவது நாளை திங்கள் அன்று கொண்டப்பட இருக்கின்றது.இந்த நாளில் ஒருவருடமாக வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எரித்துவிட்டு புதிய பொருட்களை வாங்கும் பழக்கத்தை தமிழர்கள் கால காலமாக பின்பற்றி வருகின்றனர்.இதனால் தான் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று போகிப்பண்டிகையை குறிப்பிடுகின்றனர் .
வருகின்ற ஜனவரி 13 திங்கள் அன்று காப்புக்கட்டு பண்டிகை கொண்டாடபட உள்ள நிலையில் இந்நாளில் வீட்டை சுத்தம் செய்துவிட்டு பழைய பொருட்களை எரிப்பில் போட்டு எரிப்பது ஒரு சிறப்பு என்றால் காப்பு கட்டும் முறை மற்றொரு சிறப்பாக பார்க்கப்படுகிறது.பல வகை மூலிகைகளை ஒன்றாக சேர்த்து காப்பு கட்டும் பழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது.ஆனால் தற்பொழுது வெறும் மூன்று வகை மூலிகைகளை வைத்து மட்டுமே காப்பு கட்டுகின்றோம்.
வீட்டில் உள்ளவர்களை நோய்த்தொற்று தாக்கலாமல் இருக்கவே காப்பு கட்டப்படுகிறது.ஆவாரம் பூ,சிறுகண் பீளை அதாவது பொங்கல் பூ,வேப்பிலை வைத்து மட்டுமே காப்பு கட்டப்படுகிறது.இல்லையென்றால் கிடைக்கும் மூலிகைகளை வைத்து காப்பு கட்ட வேண்டும்.வேறு மூலிகைகள் கிடைக்காதவர்கள் வேப்பிலை மற்றும் மாவிலை வைத்தும் காப்பு கட்டலாம்.
பொதுவாக பகல் நேரத்தில் மட்டுமே காப்பு கட்ட வேண்டும்.காப்பு கட்டுவதற்கு முன்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் கலந்து வீட்டு வாசலில் தெளிக்க வேண்டும்.பிறகு சேகரித்த மூலிகைகள் கொண்டு வீட்டில் காப்பு கட்ட வேண்டும்.நாளை காப்பு கட்டு பண்டிகை என்பதால் இப்பொழுது சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அனைவரும் வீடுகளில் காப்பு கட்ட வேண்டும்.