தங்க நகைகளுக்கு அடுத்து நாம் அதிகம் பயன்படுவது வெள்ளி நகைகள் மற்றும் பொருட்கள் தான்.வெள்ளி பூஜை பொருட்கள்,வெள்ளி நகைகள்,வெள்ளி ஸ்பூன்,வெள்ளி சொம்பு என்று பல வகைகளில் வெள்ளியை பயன்படுத்துகின்றோம்.
இவ்வாறு வெள்ளிப் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் அவற்றின் பளபளப்பு சீக்கிரம் குறைந்துவிடுகிறது.சிலருக்கு வெள்ளி செட்டாகாமல் சீக்கிரம் கருத்துவிடுகிறது.இப்படி கருத்துப்போன வெள்ளிப் பொருட்களை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் பளபளப்பாக மாற்றிவிடலாம்.
1)டூத் பேஸ்ட் – ஒரு ஸ்பூன்
2)தண்ணீர் – ஒரு கப்
ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி டூத் பேஸ்ட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.பிறகு கருத்துப்போன வெள்ளிப் பொருளை அதில் போட்டு சிறிது நேரம் ஊறவிடுங்கள்.
பிறகு ஒரு பயன்படுத்தாத பிரஸை வைத்து வெள்ளிப்பொருளை தேய்த்து சுத்தம் செய்தால் அவை பளிச்சென்று மாறிவிடும்.
1)பேக்கிங் சோடா – ஒரு ஸ்பூன்
2)எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன்
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கருத்துப்போன வெள்ளிப்பொருளை போட்டு 10 நிமிடங்கள் ஊறவிட்டு சுத்தம் செய்தால் அவை புதிது போன்று பளிச்சிடும்.
1)லிக்விட் சோப் – ஒரு ஸ்பூன்
2)தண்ணீர் – ஒரு கப்
முதலில் ஒரு ஸ்பூன் லிக்விட் சோப்பை கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நுரை வரும் வரை கலந்துவிடுங்கள்.பிறகு வெள்ளிப்பொருளை போட்டு ஊறவைத்து பிரஸ் கொண்டு தேய்த்தால் கடையில் வாங்கிய போது இருந்த பளபளப்பு கிடைக்கும்.
1)பேக்கிங் சோடா – ஒரு ஸ்பூன்
2)தண்ணீர் – தேவையான அளவு
பேக்கிங் சோடாவில் தண்ணீர் சேர்த்து பேஸ்டாக்கி கொள்ளுங்கள்.அடுத்து ஒரு பிரஸ் எடுத்து பேக்கிங் சோடா பேஸ்டை தடவி வெள்ளிப்பொருட்கள் மீது வைத்து தேய்க்கவும்.இவ்வாறு செய்தால் கருத்துப்போன வெள்ளிப்பொருட்கள் பளபளப்பாக மாறும்.