ஜனவரி 10, 2025 வெளியான கேம் சேஞ்சர் படத்தின் ரிவ்யூஸ் பாக்கலாமா!! ஷங்கரின் இயக்கத்தில், ராம்சரண்,எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, ஜெயராம், ஸ்ரீகாந்த், அஞ்சலி, ராஜமவுலி ஆகியோர் நடிப்பில் வெளியானது இந்தப் படம். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக பலரது உழைப்பினால் உருவான இந்தப் படம் திரையுலகில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்காக, சிறுசிறு இடங்களில் கூட இசை மழை பொழிய வைத்திருக்கிறார் தமன். இப்படத்தில் கலெக்டராக ராம்சரண் நடித்துள்ளார். அவர் பணிபுரியும் மாவட்டமான விசாகப்பட்டினத்தை கிரிமினல் ஃப்ரீ மாவட்டமாக மாற்ற முயல்கிறார். அப்போதுதான், ஆளுங்கட்சி முதல்வரின் மகன் மற்றும் அமைச்சரான எஸ்.ஜே. சூர்யாவை எதிர்க்க நேர்கின்றது. இருவருக்கும் இடையேயான மோதலே இப்படத்தின் கதைக்கரு.
இப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு, சிலர் படம் நன்றாக உள்ளது எனவும், சிலர் தெலுங்கு ரசிகர்களுக்கு இப்படம் பொருத்தமானதாக இருக்கும் எனவும், முதல்வர் பட சாயல் சற்று அதிகமாக தெரிகின்றது எனவும், அஸ்யூஸ்வல் ஷங்கர் பட பிரமாண்டங்கள் நிறைந்துள்ளது எனவும், பாடல்கள் நன்றாக அமைந்திருக்கலாம் எனவும், ராம்சரண் என்ட்ரியும், எஸ். ஜே. சூர்யாவை சந்திக்கும் காட்சிகளும் ஆறுதல் அளிக்கின்றன எனவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். படம் பார்த்ததையே பார்ப்பதாகவும், சுமார் தான் எனவும் ஒரு சிலர் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு பல தகவல்கள் கிடைத்தாலும், பலரது உழைப்பினால் வெளிவந்த இப்படத்தை தியேட்டருக்கு சென்று ஒரு முறை பார்த்து வரலாம் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.