அரசு திரைப்படத்தில் சரத்குமார் உடன் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதலில் விவேக் அவர்களையே அணுகியதாக இயக்குனர் சுரேஷ் ஆகாயம் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக்கிடம் சென்று கதையை கூறிய பொழுது பாதி கதையில் தான் நான் இருக்கிறேன் முழு கதையிலும் நான் வருமாறு கதையை தயாரித்துக் கொண்டு வாருங்கள் என அவர் கூறியதாகவும், அதற்கு இயக்குனர் பாதிக்கு மேல் படம் வேறொரு ஜர்னலில் சென்று விடும் எனக் கூறியதால் நாம் வேறொரு கதையில் சந்திப்போம் என்று விவேக் அவர்கள் தெரிவித்ததாகவும் இயக்குனர் சுரேஷ் ஆகாயம் தெரிவித்துள்ளார்.
அரசு திரைப்பட ஷூட்டிங்கின் போது நடைபெற்ற சில தகவல்களை தமிழ் youtube சேனலுக்கு இயக்குனர் சுரேஷ் ஆகாயம் அவர்கள் பகிர்ந்திருக்கிறார். அவை பின்வருமாறு :-
விவேக் அவர்களை மனதில் நினைத்திருந்த பொழுது அவரை திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றதால் அவருக்கு பதில் யாரை நடிக்க வைக்க வேண்டும் என்ற குழப்பத்தில் தான் இருந்ததாகவும் அனைவரும் நடிகர் வடிவேலு அவர்களை கேட்டு பார்க்கலாம் என வற்புறுத்தியதால் வேறு வழி இன்றி வடிவேலுவை அடக்கியதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். நடிகர் வடிவேலு இத்திரைபடத்தில் நடித்த ஒப்புக்கொண்டதால் அவருக்கு முன்பணம் கொடுத்து முதல் நாள் ஷூட்டிங்கும் தொடங்கப்பட்டிருக்கிறது, அவருக்கான வசனத்தை சொல்லும்பொழுது அவர் எனக்கு இதில் சிரிப்பே வரவில்லை. இதற்குத்தான் நான் என்னுடைய குழுவுடன் இணைந்த நடிக்கிறேன் எனக் கூறினேன் என்று கோபப்பட்டுள்ளார். இயக்குனர் எவ்வளவோ முயற்சித்தும் இந்த காமெடியில் எனக்கு சிரிப்பு வரவில்லை என பிடிவாதமாக சொல்லிவிட்டாராம் நடிகர் வடிவேலு.
இயக்குனர் சுரேஷ் ஆகாயம் அவர்கள் வேறு வழியின்றி சரத்குமாரிடம் சென்று நடந்தவற்றை கூறியதாகவும், நடிகர் சரத்குமார் அவர்கள் வடிவேலுவுடன் சென்று என்ன உங்களுக்கு பிரச்சனை, ஏன் உங்களுக்கு இந்த வசனங்கள் பிடிக்கவில்லை என கேட்டு இருக்கிறார். அதற்கு நடிகர் வடிவேலு அவர்கள் இந்த வசனத்தை கேட்கும் பொழுது எனக்கு சிரிப்பு வரவில்லை என்று தெரிவிக்கவே, நடிகர் சரத்குமார் அவர்கள் இப்பொழுது வந்து இந்த காட்சிகளில் நடித்துக் கொடுங்கள் ஒருவேளை நன்றாக இல்லை என்றால் ரீடெக் செய்து நடித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கவே வேறு வழி இன்றி வடிவேலு நடித்ததாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
எனினும், நடிகர் வடிவேலு அவர்கள் தன்னிடம் கோபத்தை மட்டுமே திணித்ததாகவும் ஆனால் கேமராவிற்கு முன் என்னுடைய வசனத்திற்கு ஏற்றவாறு நன்றாகவே நடித்தார் என்றும் இயக்குனர் தெரிவித்திருக்கிறார். அதன்பின் டப்பிங் இருக்க வந்த பொழுது, காமெடி சீன்களை பார்த்து அங்குள்ளவர்கள் சிரித்ததை கண்ட வடிவேலு அவர்கள் இயக்குனரை அழைத்து இது வேறொரு ஜானராக உள்ளது. எனக்கு ஒரு பொறுமையாக டப்பிங் முடித்துக் கொடுத்துள்ளார் என இயக்குனர் சுரேஷ் ஆகாயம் தெரிவித்துள்ளார்.