மோடியை ஒதுக்கிய டொனால்ட் ட்ரம்ப்.. இந்தியாவிற்கு வைக்கப்போகும் அடுத்த செக்!!

Photo of author

By Rupa

Donald Trump Modi: அமெரிக்கா அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு-க்கு தனிப்பட்ட முறையில் மோடிக்கு அழைப்பு வரவில்லை எனக் கூறுகின்றனர்.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47 ஆவது பிரதமராக இம்மாதம் 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த விழாவனது அமெரிக்க மாகாணத்தில் வாஷிங்கடனில் நடைபெற உள்ளது. மேற்கொண்டு அன்றைய தினமே துணை பிரதமராகவும் ஜேடி வான்ஸ் பதவியேற்பார். இவர் பதவியேற்கும் விழாவிற்கு அமெரிக்க-வின் நட்பு நாடுகள் எனத் தொடங்கி தொழில்துறை நிர்வாகிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

குறிப்பாக அவரிடம் நெருக்கமாக உள்ளவர்களுக்கு தனிப்பட்ட அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.அந்தவகையில் பிரதம் மோடிக்கு எந்த ஒரு அழைப்பும் வரவில்லை,மாறாக வல்லரசு நாடுகள் என்ற பெயரில் இந்தியாவுக்கு அழைப்பு வந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை ட்ரம்ப் மற்றும் மோடியின் நட்புறவானது மிகவும் நெருக்கமான ஒன்றாக இருந்தது. அதிலும், கடந்த தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட மோடியே விழா ஒன்றை நடத்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆனால் இம்முறை மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, அவருக்கேற்றார் போல ட்ரம்ப்பும் மோடி குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால் சமீபகாலமாக அவர்களது நட்புறவில் விரிசல் இருப்பது தெரியவந்துள்ளது. இவரின் பதவியேற்பு விழாவில் மோடி கலந்துக்கொள்ளாமல், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் செல்ல உள்ளார். இவ்வளவு நட்பு பாரட்டியவர்கள் மத்தியில் விரிசல் ஏறபட்டு விட்டதாக கூறுகின்றனர்.

இந்த விரிசலானது வர்த்தக ரீதியாக ஏற்பட்ட பிரச்சனை தான் முக்கிய காரணம் எனக் கூறுகின்றனர். இந்தியா தனது பொருட்கள் ஏற்றுமதியில் அதிகளவு வரியை நிரனயித்தால் நாங்களும் அப்படித்தான் செய்வோம் என டொனால்ட் கூறினார். இவர் பதவியேற்பு விழா முடிந்து இந்தியாவிற்கு இது ரீதியான நெருக்கடியை கொடுக்கலாம் எனக் கூறுகின்றனர்.