இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பெரும்பாலானோர் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த தவறுகின்றனர்.இதனால் சில நாட்களில் நோய் தீவிரத்திற்கு ஆளாக நேரிடுகின்றனர்.
அந்தவகையில் பனி காலத்தில் உதடு வறட்சியை சந்திக்கும் நாம் அதை பற்றி கவலை கொள்ளாமல் இருப்பதால் உதடுகளில் மீது வெடிப்பு ஏற்பட்டு சொரசொரப்பாக மாறுகிறது.இதனால் உதடுகளில் வலி ஏற்படுவது சில சமயம் தோல் உரிந்து இரத்தம் வெளியேறுகிறது.
பனி காலத்தில் உதடுகளுக்கு சற்று கூடுதல் அக்கறை செலுத்தி வறட்சியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)பன்னீர் ரோஜா இதழ் – ஒரு கப்
2)கற்றாழை ஜெல் – இரண்டு தேக்கரண்டி
3)தேன் – ஒரு தேக்கரண்டி
4)சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
5)பீட்ரூட் துண்டு – மூன்று
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கற்றாழை துண்டை தோல் நீக்கிவிட்டு அதன் ஜெல்லை தனியாக பிரித்துக் கொள்ளவும்.
பிறகு பன்னீர் ரோஜா இதழ் ஒரு கப் அளவிற்கு சேகரித்துக் கொள்ளவும்.அடுத்து பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது மிக்சர் ஜாரில் பன்னீர் ரோஜா இதழ்,கற்றாழை ஜெல்,பீட்ரூட் துண்டுகளை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு பாத்திரத்தில் இந்த பேஸ்டை போட்டு ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
ரோஜா கலவை சுண்டி வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.பிறகு இதை ஆறவிட்டு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து ஒரு டப்பாவில் போட்டு அடைத்துக் கொள்ளவும்.
இந்த பேஸ்டை உதடுகளுக்கு பூசி வந்தால் வறண்டு வெடிப்பு வந்த உதடுகள் ரோஜா இதழ் போன்று சாப்டாக மாறிவிடும்.
கற்றாழை ஜெல்லில் தேன் மெழுகு சேர்த்து உதடுகளில் அப்ளை செய்து வந்தால் உதடுகள் மிருதுவாக மாறும்.