மக்களுக்கு ரூ 2000 பொங்கல் ரொக்க பணம்.. உயர்நீதிமன்றம் போட்ட தடாலடி உத்தரவு!!

Photo of author

By Rupa

Pongal Festival: தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் ரொக்க பணம் வழங்குமாறு உத்தரவிட முடியாது எனக் கூறி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்களுக்கு வழங்க வேண்டிய வழக்கமான முறையை தவிர்த்து வருவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அந்த வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணம் வழங்காதது குறித்து எதிர்க்கட்சி என தொடங்கி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமின்றி கடந்த ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்கி வந்த மடிக்கணினி திட்டத்தையும் திமுக செயல்படுத்தவில்லை.

அந்த வகையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு 2000 வழங்கும் படி ஆணையிட கோரி உயர் நீதிமன்றத்தில் பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது அமர்வுக்கு வந்து நீதிபதிகள் விசாரணை செய்தனர். அதில் பாஜக சார்பில், கடந்த முறை பாராளுமன்ற தேர்தல் என்பதால் ஆளும் கட்சி பொங்கல் பரிசு தொகப்புடன் ரொக்க பணமும் வழங்கியது.

ஆனால் இம்முறை அதற்கான எந்த ஒரு தேவையும் இல்லாததால் ரத்து செய்துள்ளது. வழக்கம்போல் வழங்க வேண்டிய பரிசு தொகுப்புடன் ரொக்க பணம் வழங்கும்படி தமிழக அரசிடம் மனு அளித்ததற்கும் எந்த ஒரு பதிலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு தொகப்புடன் பணம் வழங்குவது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்று.

ஆனால் அதன் ஒட்டுமொத்த நடவடிக்கையும் அரசையே சாரும். இதில் எந்த ஒரு உத்தரவையும் நீதிமன்றத்தால் எடுக்கக்கோரி கூற முடியாது என தெரிவித்து வழக்கை முடித்து வைத்துள்ளனர். அந்த வகையில் இம்முறை எந்த ஒரு ரொக்க பணமும் மக்களுக்கு கிடைக்காது என்பது திட்டவட்டமாக தெரியவந்துள்ளது.