கிரிக்கெட் வீரர்களுக்கு ஜெக் வைத்த பிபிசிஐ!! இனி இத பண்ணலைனா விளையாடவே முடியாது!!

0
70
The Board of Control for Cricket in India (BBCI) has announced new rules
The Board of Control for Cricket in India (BBCI) has announced new rules

BBCI: இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிபிசிஐ) புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது.

சமீப காலத்திற்கு முன் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் 2024-25க்கான கோப்பை தொடரில் இந்தியா மிகவும் மோசமான தோல்வியை தழுவியது. மேலும், ஆஸ்திரேலியா அணி கேப்டனுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும் ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய அளவில் பூதாகராமாக வேடித்தது.

இந்த நிலையில் பிபிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறைகளில் விதித்து இருக்கிறது. அதாவது, கிரிக்கெட் வீரர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், வீரர்களின் உடமைகள், விளையாட்டு நேரம் தொடர்பாகவும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து வீரர்களும் கட்டாயம் பங்கு பெற வேண்டும், போட்டியின் போது அனைத்து வீரர்களும் குழுவாக பயணிக்க வேண்டும்.

தனித்து ஒரு வீரர் எவ்வித முடிவையும் எடுக்க கூடாது. வீரர்கள் குறிப்பிட்ட அளவு உடமைகளை மட்டுமே எடுத்து வர வேண்டும். அதிகமாக எடுத்து வரும் உடைமைகளின் செலவுகளை வீரர்களே ஏற்க வேண்டம். சர்வதேச விளையாட்டுகளை விளையாட செல்லும் வீரர்கள் அனைவரும் ஒரே குழுவாகத்தான் பயணிக்க வேண்டும்.

வீரர்கள் தங்களுடன் மேலாளர், சமையல் உதவியாளர் உள்ளிட்ட தனிப்பட்ட நபர்களை அழைத்து வரக்கூடாது. வீரர்கள் பயிற்சியின் போது சீக்கிரமாக கிளம்ப கூடாது. இந்த விதிமுறைகளில் தளர்வுகள் ஏதாவது வேண்டுமானால் பயிற்சியாளர், கேப்டன், தேர்வுக்குழு அனுமதி பெறுவது கட்டாயம் ஆகும்.

Previous articlePF பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! KYC செயல்முறை இனி சுய சான்றளிப்புடன் விரைவாக முடியும்!!
Next articleஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்!! திமுக அடக்குமுறையை கையாளுகிறது நாம் தமிழர் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு!!