Erode East Constituency By-election: திமுக ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன் படுத்துகிறது நாம் தமிழர் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு.
கடந்த நவம்பர்- 27ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இறந்தார். எனவே,ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவினால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இன்று வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என்பது இடைத் தேர்தலுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படுவது ஆகும். கடந்த திமுக காங்கிரஸ் கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றிப் பெற்றவர் ஈவேர திருமகன் கடந்த வருடம் இவர் இறந்தார். இவரது இறப்பினால் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். அதன் இந்த நிலையில் கடந்த மாதம் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் இறந்திட மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
முன்பு நடந்த இடைத் தேர்தலில் ஆளும் கட்சி போது மக்களை பட்டியில் அடைத்து வைப்பது போல கூடாரங்கள் அமைத்து மூன்று வேலை உணவு மற்றும் ஓட்டுக்கு காசு வழங்கி இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எதிர்கட்சிகள் மற்றும் ஊடகங்களால் முன் வைக்கப்பட்டது. எனவே, தற்போது நடைபெற இருக்கும் இடைத் தேர்தலிலும் ஆளுங்கட்சி தங்கள் அதிகாரத்தை தவறாக வழியில் பயன் படுத்துவார்கள், தேர்தல் முறைப்படி நடைபெறாது என்ற காரணத்தை கூறி அதிமுக மற்றும் பாஜக,பாமக, தவெக போன்ற கட்சிகள் ஈரோடு இடைத் தேர்தலை புறக்கணித்து இருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் திமுக சார்பில் சந்திரக் குமாரை வேட்பாளர் அறிவித்து இருக்கிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கட்சியினருடன் ஊர்வலம் செல்ல காவல்துறை அனுமதி மறுத்து இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுங்கட்சி காவல்துறையின் வாயிலாக அராஜகத்தை கையாண்டு வருகிறது கூறி இருக்கிறார்.