இன்று பலரது இல்லங்களில் கரப்பான் பூச்சி,ஈ,பல்லி,எலி போன்றவற்றின் தொல்லை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.வீட்டில் அழுகிய பழங்கள்,உணவுப் பொருட்கள் இருந்தால் ஈக்கள் கூட்டம் கூட்டமாக வந்து நமக்கு தொல்லை கொடுக்கும்.உணவுப் பொருட்கள் மீது இந்த ஈக்கள் உட்காரும் பொழுது பாக்டீரியா மற்றும் கிருமிகள் தொற்றுகள் எளிதில் பரவிவிடும்.இதனால் நாம் நோய்வாய்ப்பட அதிக வாய்ப்பிருக்கிறது.எனவே வீட்டில் உள்ள ஈக்களை கீழ்கண்ட பொருட்களை கொண்டு விரட்டுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)தூள் உப்பு – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அடுப்பை அணைத்து விட்டு இளஞ்சூட்டு பதம் வந்த பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி தூள் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஈக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை ஒழியும்.
தேவையான பொருட்கள்:-
1)புதினா இலை – ஐந்து
2)துளசி – பத்து இலைகள்
செய்முறை விளக்கம்:-
ஐந்து புதினா இலைகள் மற்றும் பத்து துளசி இலைகளை பொடிப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.
பிறகு இதை வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் ஈக்கள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படும்.
தேவையான பொருட்கள்:-
1)வினிகர் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
ஒரு கிண்ணத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வினிகர் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
இதை ஆறவைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் ஈக்கள் நடமாட்டம் குறையும்.
தேவையான பொருட்கள்:-
1)வெள்ளை சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
2)கருப்பு மிளகுத் தூள் – கால் தேக்கரண்டி
3)பசும் பால் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
ஒரு கிளாஸ் பாலை காய்ச்சி ஆறவிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் கால் தேக்கரண்டி கருப்பு மிளகுத் தூள் சேர்த்து கலந்துவிட வேண்டும்.
அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி வீட்டின் ஒரு மூலையில் வைக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் ஈக்கள் கவரப்பட்டு அதில் விழுந்து மடிந்துவிடும்.