ஹேர் திக்னஸ் அதிகரிக்க.. மூன்று பொருட்கள் கொண்ட ஹேர்பேக் மட்டும் ட்ரை பண்ணிட்டு வாங்க!!

0
96

தலை முடியின் அடர்த்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் அரிசி ஹேர் பேக் அல்லது கற்றாழை ஹேர் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தலாம்.ஒல்லியான முடியை அடர்த்தியாக வளர வைக்க இந்த ஹேர் பேக்ஸ் நிச்சயம் உதவியாக இருக்கும்.

தலைமுடி அடர்த்தி குறைய காரணங்கள்:-

1)தலைமுடி பராமரிப்பின்மை
2)கெமிக்கல் ஷாம்பு அதிகம் பயன்படுத்துதல்
3)அடிக்கடி தலைக்கு குளித்தல்
4)மோசமான உணவுப் பழக்கம்

தேவையான பொருட்கள்:-

**அரிசி – ஒரு தேக்கரண்டி
**வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
**முட்டை – ஒன்று

செய்முறை விளக்கம்:-

1)ஒரு தேக்கரண்டி புழுங்கல் அரிசியை கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊறவிடுங்கள்.

2)ஒரு மணி நேரம் வரை ஊறவைத்த பின்னர் மிக்சர் ஜாரில் அரிசியை ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

3)அரிசி நன்றாக அரைக்கப்பட வேண்டும்.அதேபோல் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஊறவைத்து பைன் பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

4)பிறகு இந்த அரிசி பேஸ்ட் மற்றும் வெந்தயப் பேஸ்டை ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

5)அடுத்து ஒரு முட்டையை உடைத்து அதன் வெள்ளக் கருவை மற்றும் தனியாக பிரித்து அரிசி மாவு கலவையில் சேர்த்து நுரை வரும் வரை கலந்துவிட வேண்டும்.

6)பிறகு இந்த ஹேர் பேக்கை தலை முழுவதும் அப்ளை செய்ய வேண்டும்.முடியின் மயிர்க்கால் ஒவ்வொன்றிலும் இந்த ஹேர்பேக் படும்படி தடவ வேண்டும்.பிறகு மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசிக் கொள்ள வேண்டும்.

7)இந்த ஹேர்பேக்கை வாரத்திற்கு இருமுறை தலைக்கு பயன்படுத்தி குளித்து வந்தால் முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

**கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
**முட்டையின் வெள்ளைக் கரு – ஒன்று

செய்முறை விளக்கம்:-

1)கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

2)அடுத்து ஒரு முட்டையை உடைத்து அதில் இருந்து வெள்ளைக் கருவை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

3)இந்த இரண்டு பொருட்களையும் கிண்ணத்தில் போட்டு நன்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

4)பின்னர் இந்த ஹேர் பேக்கை தலை முழுவதும் அப்ளை செய்ய வேண்டும்.அடுத்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

5)இந்த ஹேர்பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்கும்.

Previous articleபுற்றுநோய் செல்களை தும்சம் செய்யும் கசாயம்!! இரண்டு மாதத்தில் பரிபூரணமாக குணமாக இப்போவே ஸ்டார்ட் பண்ணுங்க!!
Next articleஅடடே பசும் பாலில் குங்குமப்பூ போட்டு குடிப்பது இவ்வளவு நன்மைகளை கொடுக்குமா!!