ADMK: அதிமுக இரட்டை இலை விவகாரம் தற்போது வரை முடியாமல் நிலுவையில் உள்ளது. இச்சமயத்தில் அதிமுக கட்டாயம் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறியுள்ளனர். பாஜக தனித்து நின்றால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து அதிமுகவுடன் கைகோர்க்க முயற்சித்து வருகிறது. அந்த வகையில் ஓ பன்னீர்செல்வத்துடன் தற்பொழுது வரை பாஜக தொடர்பில் தான் உள்ளனர். மத்திய இணையமைச்சரைக் கூட சமீபத்தில் சந்தித்து வந்தார்.
இவ்வாறு இருக்கும் பொழுது பாஜக, எப்படியாவது மீண்டும் அதிமுகவை இணைத்து தங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று திட்டத்தை தீட்டி வருகின்றனர். அப்பொழுதுதான் தினகரன், பன்னீர்செல்வம், சசிகலா என்று சிதறிய வாக்குகள் அனைத்தும் ஒன்று சேரும் இது பாஜகவுடன் கூட்டணி வைக்கும் பொழுது பக்கபலமாக அமையும். ஆனால் எடப்பாடி எதற்கும் முட்டு கொடுக்காததால் மத்தியில் இருந்து அடுத்த கட்ட நகர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
அதாவது பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி இருவருக்கும் நெருக்கடி தரும் வகையில் வருமானத்துறை மூலம் ரைட் அனுப்பி வருகின்றனர். அப்படி அனுப்பும் பட்சத்தில் முடியாத உச்சகட்ட சூழ்நிலையில் தங்களிடம் வந்து ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் டெல்லி மேலிடம் உள்ளதாம். இந்த நெருக்கடிகளை தவிர்த்து பாஜக கூட்டணியை அதிமுக கைவிடுமா அல்லது மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.