சருமத்தின் பொலிவை அதிகரிக்கும் முல்தானி சந்தனம்!! 100% ரிசல்ட் கிடைக்க.. இப்படி பயன்படுத்துங்க!!

Photo of author

By Divya

பெண்கள் தங்கள் சருமத்தை பொலிவாக வைக்க,என்றும் இளமை தோற்றத்துடன் இருக்க முல்தானி,வேப்பிலை,சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சோப் தயாரித்து பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

1)முல்தானி மெட்டி பவுடர் – ஒரு கப்
2)காபித் தூள் – ஒரு தேக்கரண்டி
3)வேப்பிலை – ஒரு கப்
4)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

*முதலில் ஒரு கப் வேப்பிலையை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

*அடுத்து ஒரு கப் முல்தானி மெட்டி பொடி எடுத்துக் கொள்ளுங்கள்.இதை மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு காய வைத்த வேப்பிலையை அதில் கொட்டி கொள்ள வேண்டும்.

*பிறகு ஒரு தேக்கரண்டி காபித் தூளை அதில் கொட்டி பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

*இதற்கு அடுத்து ஒரு கிண்ணம் எடுத்து அரைத்து வைத்துள்ள பவுடரை கொட்ட வேண்டும்.அதன் பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை கிண்ணத்தில் பிழிந்து கொள்ள வேண்டும்.

*அடுத்து இந்த கலவையை நன்றாக கலந்துவிடுங்கள்.அதன் பிறகு சிறிதளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.

*பின்னர் ஒரு சோப் மோல்ட் எடுத்து தயாரித்து வைத்துள்ள கலவையை அதில் செட் செய்ய வேண்டும்.

*இதை சோப்பை நிழலில் 45 நிமிடங்களுக்கு நன்கு உலர்த்த வேண்டும்.அதன் பிறகு இந்த சோப்பை சருமத்திற்கு பயன்படுத்தி குளிக்கலாம்.

இந்த முல்தானி மெட்டி சோப் சருமத்தை மிகவும் மிருதுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.சருமம் பளபளப்பாக இருக்க இந்த சோப் பயன்படுத்தலாம்.இந்த சோப்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சரும நிறத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)முல்தானி மெட்டி – 150 கிராம்
2)சந்தனப் பொடி – 100 கிராம்
3)மஞ்சள் கிழங்கு – ஒன்று
4)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
5)தண்ணீர் – தேவையான அளவு
6)சோப் அச்சு – ஒன்று

செய்முறை விளக்கம்:-

*முதலில் ஒரு கிண்ணத்தில் 150 கிராம் அளவிற்கு முல்தானி மெட்டி பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

*அடுத்து அதில் 100 கிராம் சந்தனத் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

*அடுத்து ஒரு மஞ்சள் கிழங்கை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து முல்தானி மெட்டி பொடியில் மிக்ஸ் செய்ய வேண்டும்.

*அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பத்தித்திற்கு பிசைய வேண்டும்.

*பிறகு இதை சோப் அச்சில் போட்டு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு செட்டாக விட வேண்டும்.

*பிறகு இந்த சோப் சருமத்திற்கு பயன்படுத்தும் பக்குவத்திற்கு வந்துவிடும்.இந்த சோப்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமம் ஜொலிக்கும்.