ஒரு பக்கம் கீர்த்தி சுரேஷ் மறுபக்கம் திரிஷா.. இது தான் விஜய்யின் சுயரூபம்!! உண்மையை உடைத்த நிரூபர்!!

TVK: தமிழக அரசியலில் மாபெரும் இரு கட்சிக்களை தாண்டி புதிய மாற்றம் வேண்டும் என்பதை பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் விஜய் ஆரம்பித்த தவெக கட்சி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதனை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க  முடியும்.

ஆனால் தனது முதல் மாநாட்டிலேயே புது கட்சி தொடங்கியது என்பதற்கான அடையாளத்தை உடைத்ததோடு மாற்று கட்சியினருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தினார் என்றே சொல்லலாம். டாப் ஹீரோக்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கும் விஜய் மார்க்கெட் இருக்கும் போதே தனது திரை பயணத்தை விட்டு அரசியலில் நுழைவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இச்சமயம் இயற்கை பேரிடர் உள்ளிட்டவற்றை தன் இடத்திலிருந்தே கவனிக்கும் தலைவர், புகைப்பட தலைவர் என்றெல்லாம் அடுத்தடுத்து பெயர் வைத்து வருகின்றனர். இதற்கு அடுத்தப்படியாக திரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் பின் செல்பவர் என்று கொச்சை படுத்தியும் பேசி வருகின்றனர்.

குறிப்பாக விஜய்யின் மேனேஜரின் ரூட் நிறுவனம் நடத்திய பொங்கல் விழாவில் விஜய் கலந்துக் கொண்டார். இதற்கு கீர்த்தி சுரேஷும் வந்ததால் இருவரையும் இணைத்து இனையத்தில் விமர்சனம் செய்து பேசி வருகின்றனர்.

இதுகுறித்து தெளிவான விளக்கத்தை பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார். அதில், கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய் கலந்துக் கொண்ட பொங்கல் விழா குறித்து மிகவும் அவதூறாக பேசி வருகின்றனர். ஆனால் அது விஜய்யின் மேனஜர் நடத்தியது. அந்த விழா கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் விழா கிடையாது.

அதுமட்டுமின்றி இந்த விழா நிகழ்ச்சியானது விஜய் அவர்களின் வீட்டின் பக்கம் என்பதால் அங்கு வந்துள்ளார். மேற்கொண்டு மேனஜர் என்று பார்ப்பதை விட உடன் பிறந்த சகோதரராகவே விஜய் அவரை பார்க்கிறார். அவர் வளரக் கூடாது என்பதற்காக இப்படிப்பட்ட பெயர்களை சூடி விடுகின்றனர் எனக் கூறினார்.