BRICS: அமெரிக்க டாலருடன் வர்த்தகம் செய்யுமாறு பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற பிறகு இந்தியர்களின் ஹெட்ச் எம்பி1 விசா குறித்து இருந்த முக்கிய நிபந்தனைகள் அனைத்தும் தவிர்க்கப்பட்டு புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று முன்னதாகவே தெரிவித்தனர். அதன்படி இந்த விசா மூலம் இந்தியர்கள் தங்களின் வேலைவாய்ப்பை சுரண்டுவதாக அமெரிக்காவில் வலதுசாரிகள் தொடர்ந்து கூறி வந்த பொழுதும், திறமையானவர்களுக்கு எப்பொழுதும் இங்கு வாய்ப்பு உண்டு என ட்ரம்ப் தெரிவித்தார்.
இவ்வாறு ஆதரவு தெரிவித்து விட்டு தற்பொழுது இந்தியாவுக்கு எதிராக எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரிக்ஸ் நாடுகள் என அனைவருக்கும் ஒன்றான டாலர் வர்த்தகம் குறித்து கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு பிரிக்ஸ், வர்த்தக நாடுகள் தங்களுக்கு என கரன்சியை உருவாக்குவதாக ஆலோசனை செய்துள்ளனர்
ஆனால் அதனை செயல்முறைப்படுத்தவில்லை. தற்பொழுது மீண்டும் அவ்வாறான ஆலோசனையில் இருப்பதாகவும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் கட்டாயம் எங்களோடு வர்த்தகம் செய்கையில் 100% வரி ஏய்ப்பு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்தியா, எங்களுக்கு புதியதாக பிரிக்ஸ் கரன்சி உருவாக்கத்தில் விருப்பமில்லை. மேற்கொண்டு பிரிக்ஸ் அமைப்புடன் இருக்கும் இதர நாடுகளுக்கு இதுகுறித்து தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல பிரிக்ஸ் கரன்சி மூலம் வர்த்தகம் நடத்துவதென்றாலும் சரி அல்லது பிரிக்ஸ் நாட்டின் ஏதேனும் கரன்சியுடன் வர்த்தகம் நடத்தினாலும் சரி உங்களால் எந்த ஒரு வர்த்தகத்தையும் அமெரிக்காவில் செய்ய முடியாது. டாலர் முறையில் மட்டுமே வர்த்தகம் செய்ய வேண்டும் இல்லையென்றால் நமக்குள் உண்டான உறவை முடித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இது குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், எங்களுக்கு பிரிக்ஸ் கரன்சி குறித்து எந்த ஒரு ஆதரவும் இல்லை. அதேபோல நாங்கள் டாலரிலேயே வர்த்தகம் செய்ய விரும்புகிறோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.