தற்பொழுது பள்ளி பருவ குழந்தைகள் முதல் இளம் வயது நபர்கள் வரை நரை முடி பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.இந்த இளநரையை மீண்டும் கருமை நிறத்திற்கு மாற்ற இயற்கை ஹேர் டை பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
3)கறிவேப்பிலை – இரண்டு கொத்து
4)நெல்லிக்காய் – மூன்று
5)கடுகு எண்ணெய் – 50 மில்லி
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் இரும்பு வாணலி வைத்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை போட்டு நல்ல வாசம் வரும் வரை வறுக்க வேண்டும்.இந்த கருஞ்சீரகத்தை ஒரு தட்டில் கொட்டிவிட்டு அடுத்ததாக ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை இரும்பு வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.
வெந்தயம் பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்.பிறகு இதை ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்க வேண்டும்.
அடுத்து இரண்டு கொத்து உலர்ந்த கருவேப்பிலையை வாணலியில் போட்டு சிறிது நேரம் வறுக்க வேண்டும்.அதன் பின்னர் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
அடுத்து மூன்று உலர் நெல்லிக்காயை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு மிக்சர் ஜாரை எடுத்து வறுத்த பொருட்களை தனி தனியாக பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு இரும்பு கடாயை வாணலியில் வைத்து சூடாக்கி கொள்ள வேண்டும்.பிறகு கருஞ்சீரகப் பொடி,வெந்தயப் பொடி,நெல்லிக்காய் பொடி மற்றும் கறிவேப்பிலை பொடியை அதில் கொட்டி லேசாக வறுக்க வேண்டும்.
பின்னர் 50 மில்லி அளவு கடுகு எண்ணெயை அதில் ஊற்றி நன்றாக கலந்துவிட வேண்டும்.கடுகு எண்ணெயில் பொடி நன்றாக மிக்ஸ் ஆகும் வரை கலக்க வேண்டும்.
இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு இந்த கலவையை கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் இதை நன்றாக ஆறவைக்க வேண்டும்.
அடுத்து தலையில் எண்ணெய் பிசுக்கு இல்லாத நிலையில் இந்த பேஸ்டை தலை முடியின் மயிர்க்கால்களில் படும்படி தடவி ஒரு மணி நேரத்திற்கு மேல் ஊறவிட வேண்டும்.
அதன் பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தாலே இளம் வயது வெள்ளை முடி நாளடைவில் கருமையாக மாறிவிடும்.