10 நாளில் தீர்வு.. முடி உதிர்வு பொடுகு பிரச்சனைக்கு தேங்காய் எண்ணைய்யுடன் இதை மட்டும் சேர்த்து தடவுங்கள்!!

Photo of author

By Rupa

Hairfall Problem: முடி உதிர்வு, பொடுகு உள்ளிட்ட பிரச்சனைகள் குணமாக இயற்கை முறையில் சரிசெய்வது எப்படி?

ஆண் பெண் என இருவருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை என்பது காணப்படும். குறிப்பாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சற்று கூடுதலாகவே இருக்கும். முதலில் ரத்த ஓட்டம் ஆனது நமது தலைப்பகுதிக்கு நன்றாக செல்ல சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. மேற்கொண்டு அதிகப்படியான மனசோர்வு மற்றும் மன அழுத்தம் இருப்பதை தவிர்க்க வேண்டும். இவற்றை எல்லாம் தாண்டி நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் அதிகப்படியாட காய்கறி மற்றும் கீரையை சேர்த்துக் கொள்வது நல்லது. இதனுடன் சித்த வைத்திய முறையை பின்பற்றும் பொழுது முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
நொச்சி சாறு 1/2 படி
கையான் தகரை சாறு 1/2 படி
வாசனை புல் சாறு 1/2 படி
அவுரி சாறு 1/2 படி
சின்னி சாறு 1/2 படி
தேங்காய் எண்ணெய் 2/1 படி

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வெயிலில் வைக்க வேண்டும்.
வெயிலில் வைத்து சாறுகள் அனைத்தும் சுண்டிய பிறகு அடுப்பில் நன்றாக காய்ச்ச வேண்டும்.
இதனைத் தொடர்ந்து தலையில் தேய்த்து பின்பு குளித்து வர முடிவு உதிர்வு பிரச்சனை நீங்கும்.
அதுமட்டுமின்றி சுருள் முடி அதிகம் உள்ளவர்கள் இதனை உபயோகப்படுத்தும் அந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.