ஆளில்லா ரயில் பாதையை கடந்த பேருந்து; எதிர்பாராமல் நடந்த கோர விபத்தில் 19 பேர் பலி

0
148

பாக்கிஸ்தான் ஷேக்புரா மாவட்டம் பரூக்காபாத் ரயில் நிலையம் அருகே இந்த கோரமான விபத்து நடந்துள்ளது. சீக்கியர்களின் நான்கானா வழிபாட்டு தளத்தில் இருந்து லாகூர் வழியே பயணிகள் பேருந்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆளில்லா ரயில் பாதையில் நிற்காமல் பேருந்து இயக்கப்பட்டது.

அந்நேரத்தில் லாகூர் சென்ற விரைவு ரயில் வேகமாக பேருந்து மீது மோதியது. யாரும் எதிர்பாராத இந்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த பயணிகளை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்தவர்களில் 5 பேர் நிலைமை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் பாதிப்படைந்த பயணிகளுக்கு தீவிர அளிக்குமாறும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையிம் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். ரயில் விபத்து குறித்து விசாரிக்க குழுவை அமைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ஷேக்புரா ரயில்வே அதிகாரியையும், என்ஜின் டிரைவரையும் சஸ்பெண்ட் செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.

Previous articleசிலை கடத்தல் துறையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்ற காவலர் பொன்மாணிக்கவேல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி??
Next articleஜியோவின் ஜியோ மீட் செயலி! ஜூம் செயலிக்கு போட்டியாக ஜியோ மீட்