குடும்பஸ்தன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து கொண்டிருக்கக் கூடிய நடிகர் மணிகண்டன் அவர்கள் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் கிடைத்த நட்பு குறித்தும் அந்த நட்பினால் தனக்கு ஏற்பட்ட நன்மைகள் குறித்தும் விவரித்திருக்கிறார்.
நடிகர் மணிகண்டன் அவர்கள் பேட்டி ஒன்று தெரிவித்திருப்பதாவது :-
காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் மழையில் சிக்கிக் கொள்ளவே, மழைக்காக ஒரு இடத்தில் சென்று ஒளியும் பொழுது விஜய் சேதுபதி அவர்களை கண்டதாகவும் அப்பொழுது அவருடன் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் நடிகர் மணிகண்டன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
மேலும் தன்னுடைய தங்கையினுடைய மூக்கில் அறுவை சிகிச்சை செய்யும் தருணத்தில் கூட அவராகவே போன் செய்து கேட்டுவிட்டு நேரில் வந்து பார்த்தார் என்றும் தங்கையுடைய திருமணத்தின் பொழுது அவருக்கு முறையாக பத்திரிக்கை வைக்காத பொழுது கூட நேரடியாக வந்து 3 லட்சம் ரூபாய் கொடுத்து தங்கையுடைய திருமணத்தை நல்லபடியாக செய்து முடிக்கும் படி தெரிவித்ததாகவும் நடிகர் மணிகண்டன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.