எஸ் டி ஆர் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமலுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இதற்கிடையே அவரது பிறந்த நாள் பிப்ரவரி மூன்று வரும் நிலையில் அன்று அவர் ரசிகர்களுக்கு மூன்று அறிவிப்புகளை வெளியிடுவதாக கூறியுள்ளார்.
தற்சமயம் அவர் நடிக்கும் தக் லைஃப் படத்தின் வெளியீடு குறித்தும் அதில் இடம்பெறலாம் என்ற கணிப்பு உள்ளது. அத்துடன் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் ஒரு கதை குறித்து எஸ் டி ஆர்க்கு ஒரு லைன் சொல்ல ஆரம்பித்தவுடன், இந்த மாதிரி கதையைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் என்று இவர் பெரிதும் வரவேற்றுள்ளார். அப்படத்தில் எப்போது நடிக்கப் போகிறார் என்ற தகவலும் அந்த அறிவிப்பு வரிசையில் அடங்கும் எனவும் கணிப்பு உள்ளது. இந்த ஆண்டில் இவர் நடிப்பில் வெளியாகும் முதல் படம் இதுவாக தான் இருக்கும்.
மலையாளத்தில் 2018 பட இயக்குனரான ஜூட் ஆண்டனி இயக்கத்தில் பிரம்மாண்ட படம் ஒன்று நடிக்க இருப்பதாகவும் கூறியிருந்தார். இதுவும் அந்த அறிவிப்பு வரிசையில் இடம் பெற்றிருக்கும் என்ற கணிப்பு ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது. மேலும், ஏற்கனவே இவர் அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த வருடம் சிம்பு ரசிகர்களுக்கு பெரும் விருந்து காத்துக் கொண்டிருக்கிறது.