THAI AMAVASAI 2025: இவர்கள் மட்டும் தான் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்!! சுமங்கலி பெண்கள் தர்ப்பணம் கொடுக்கலாமா?

Photo of author

By Divya

ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது.இந்நாளில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் கர்மாக்கள் நீங்கி நன்மைகள் நடக்கும்.12 மாதங்களில் வரும் அமாவாசையில் ஆடி,புரட்டாசி மகாளய அமாவாசை மற்றும் தை மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு பெற்றவையாகும்.

நாம் பிற வழிபாட்டை மேற்கொள்ள தவறினாலும் அமாவாசை நாளில் நம் முன்னோர்களை வழிபட மட்டும் தவறக்கூடாது.தை அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட்டால் அவர்களை சேரும் புண்ணியங்கள் அனைத்தும் நம்மை வந்து சேரும்.இன்று தை அமாவாசை நாளில் விரதம் மேற்கொண்டு முன்னோர்களை வழிபட வேண்டும்.பிறகு காகத்திற்கு உணவு வைத்த பின்னரே நாம் சாப்பிட வேண்டும்.

மேலும் இந்த அமாவாசை நாளில் கொடுக்கப்படும் தர்ப்பணம் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.இந்த அமாவாசை தர்ப்பணம் மாத மாதம் வரும்.இதில் மிக சக்தி வாய்ந்த அமாவாசையான ஆடி,புரட்டாசி மற்றும் தை ஆகியவற்றில் முன்னோர்களுக்கு விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

இறந்த முன்னோர்களை நினைத்து வீட்டில் உள்ளவர்கள் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.ஆனால் எல்லோரும் இந்த விரதத்தை இருக்க முடியாது.தாய் மற்றும் தந்தை இல்லாத வீட்டில் மகன் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

அதேபோல் கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தை இருக்கலாம்.தாய் மற்றும் தந்தை இல்லாத சுமங்கலி பெண் இந்த விரதத்தை ஒருபோதும் மேற்கொள்ள கூடாது.சுமங்கலி பெண்ணின் தந்தை இல்லையென்றால் தாய் இந்த விரதம் இருக்கலாம்.தாய்,தந்தை மற்றும் உடன் பிறப்புகள் யாரும் இல்லையென்றால் கோயிலுக்கு சென்று வழிபட்டு தானம் செய்யலாம்.

தாய் மற்றும் தந்தைக்காக சுமங்கலி பெண்ணின் கணவர் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க கூடாது.தங்களின் தாய் தந்தைக்காக உறவினர் இந்த விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்கலாம்.சுமங்கலி பெண்ணின் மாமனார் மற்றும் மாமியார் இல்லையென்றால் அவர்களுக்கு படையல் போடுவதற்கு சமைக்கும் பொழுது உணவு உட்கொள்ளாமல் இருக்கக் கூடாது.

மேலும் ஆணிற்கு தாய்,தந்தை இல்லையென்றால் அமாவாசை விரதத்தை கடைபிடித்து தகர்ப்பணம் கொடுக்கலாம்.இந்த முன்னோர் வழிபாட்டில் எள் மற்றும் தண்ணீரை இறைத்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.

இந்நாளில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று விளக்கேற்றி மனதார வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.அமாவாசை நாளில் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டால் நிறைய நன்மைகள் நம்மை வந்து சேரும்.இந்நாளில் காகத்திற்கு மட்டுமின்றி பசுவிற்கும் உணவளித்தால் கோடி புண்ணியம் கிடைக்கும்.பசுவிற்கு வாழைப்பழம்,அகத்தி கீரை,பொங்கல்,வெல்லம் போன்றவற்றை சாப்பிடக் கொடுக்கலாம்.