மோடியை காலில் விழ வைத்த பாஜக நிர்வாகி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

PM Modi: டெல்லியில் வேட்பாளர் காலை மோடி தொட்டு வணக்கிய வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சட்டமன்ற தேர்தலானது  டெல்லியில் வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் 70 தொகுதிகளில் 36 இடங்களில் வெற்றி பெறுபவரே ஆட்சி அமைக்கும் தகுதி பெற்றவர். அவ்வாறு இருக்கையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி 36 இடங்களுக்கு மேல் அதாவது 62 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 8 இடங்களை மட்டுமே தன் வசம் கொண்டது. இவ்வாறு இருக்கையில் மூன்றாவது முறையாகவும் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் மும்மரம் காட்டி வருகின்றது.

இந்த சூழலில் தான் பிரதமர் மோடி வேட்பாளர் காலில் விழுந்த செயலானது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. தலைநகர் டெல்லியில் கட்சி பொதுக்கூட்டமானது நடைபெற்றுள்ளது. இதில் மோடி கலந்துகொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேசினார். அவ்வாறு பேசுவதற்கு முன் ரவீந்தர் சிங் நேகி என்ற வேட்பாளர் மோடியை அணுகும் பொழுது அவர் காலில் விழுந்துள்ளார். சிறிதும் கூட யோசிக்காமல் உடனடியாக மோடியும், வேட்பாளர் ரவீந்திர சிங் நேகி காலை மூன்று முறை தொட்டு வணங்கியுள்ளார்.

https://x.com/PTI_News/status/1884511456865181810?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1884511456865181810%7Ctwgr%5Eb592a400b4a31e63a637e6cf4cb4629c6f86fca0%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.timesnownews.com%2Findia%2Fdelhi-rally-surprise-why-did-pm-modi-touch-a-young-leader-ravinder-negis-feet-article-117695014

இவ்வாறு மோடி செய்தது மேடையில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவருக்கு பின் வந்த மற்றொருவரும் இதுபோல காலில் விழ நினைத்தபொழுது தடுத்து நிறுத்தி விட்டனர். இப்படி வேட்பாளர் காலில் விழுந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. இதற்கு முன் தமிழ்நாட்டிற்கு மோடி வந்த பொழுதும் பலரும் இவரது கால்களை தொட்டு வணங்கி உள்ளனர். அப்பொழுதெல்லாம் இதுபோல் நடந்து கொள்ளாமல் ஏன் டெல்லியில் மட்டும் சமத்துவம் பேசும் தலைவராக நடந்து கொள்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.