சருமம் மற்றும் முடி பராமரிப்பிற்கு பயன்படும் வைட்டமின் ஈ காப்சியூல்!! இதை சரியாக பயன்படுத்துவது எப்படி?

Photo of author

By Divya

நம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த ஒன்றாக திகழும் வைட்டமின் ஈ சருமம் மற்றும் முடி சார்ந்த பிரச்சனைகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.மீன்,இறைச்சி,பழங்கள்,முட்டை உள்ளிட்டவைகளில் வைட்டமின் ஈ அதிகம் காணப்படுகிறது.

அதேபோல் வைட்டமின் ஈ மாத்திரை அதாவது காப்சியூலாகவும் கிடைக்கிறது.வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வைட்டமின் ஈ மாத்திரையை சருமத்தில் அப்ளை செய்து வந்தால் வறட்சி நீங்கி சருமம் பொலிவாகவும்,மிருதுவாகவும் இருக்கும்.வைட்டமின் ஈ மாத்திரையை தொடர்ந்து சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் சுருக்கம் உண்டாவது கட்டுப்படும்.சருமத்தில் ஈரப்பதம் அதிகரிக்க இந்த வைட்டமின் ஈ மாத்திரையை பயன்படுத்தலாம்.

சருமம் பளபளப்பை பெற வைட்டமின் ஈ மாத்திரையை இரவு நேரத்தில் அப்ளை செய்யலாம்.ஆனால் அளவிற்கு அதிகமாக வைட்டமின் ஈ மாத்திரையை பயன்படுத்தக் கூடாது.அதேபோல் இந்த வைட்டமின் ஈ மாத்திரையை நீண்ட நேரம் சருமத்தில் வைத்திருக்க கூடாது.இதனால் தோல் வறட்சி,ஒவ்வாமை உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

சிலர் அதிகளவு வைட்டமின் ஈ மாத்திரையை பயன்படுத்துவார்கள்.இதனால் மோசமான பக்கவிளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.இளநரை,முடி உதிர்வு,முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் வைட்டமின் ஈ எண்ணெயை பயன்படுத்தி வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

வைட்டமின் ஈ மாத்திரை பயன்பாடு:

1)இளம் வயது சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்
2)பொடுகுத் தொல்லை
3)முடி உதிர்வு
4)சரும வறட்சி
5)கண் கருவளையம்
6)இளநரை

வைட்டமின் ஈ மாத்திரை பயன்படுத்துவது எப்படி?

முதலில் ஒரு வைட்டமின் ஈ மாத்திரையை எடுத்து கட் செய்து அதில் இருந்து எண்ணெயை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இந்த எண்ணெயை முதலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அப்ளை செய்யுங்கள்.தோல் அரிப்பு,ஓவ்வாமை,எரிச்சல் போன்றவை ஏற்படுகிறதா என்று கவனியுங்கள்.

இதுபோன்ற எந்தஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றால் இந்த வைட்டமின் ஈ மாத்திரையை தாராளமாக பயன்படுத்தலாம்.ஆனால் ஒரே நேரத்தில் அளவிற்கு அதிகமாக வைட்டமின் ஈ எண்ணெய் பயன்படுத்துவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.