பெற்றோர்களே கவனம் தேவை..!! பப்ஜி கேமில் 16 லட்சத்தை இழந்த சிறுவன்? உழைத்த காசை இழந்து கதறும் தந்தை…!!போலீசில் புகார்?

0
129

நாடு முழுவதும் பப்ஜி விளையாட்டு மோகம் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஆட்டிபடைக்கிறது. தற்போது ஊரடங்கு காரணமாக அனைவரும் வீடுகளில் முடங்கியிருப்பதால் அவர்களின் பொழுதுபோக்கே இந்த பப்ஜி கேம் ஆக இருக்கிறது.

என்னதான் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பப்ஜி கேமால் மகன் தந்தையை வெட்டிக் கொள்வது வீட்டிற்கு தெரியாமல் பணம் எடுப்பது போன்ற செயல்கள் நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தில் 17 வயது சிறுவன் பப்ஜி கேம்-ஐ விளையாடி 16 லட்சத்தை இழந்து உள்ளார். இதற்கான தனது அம்மாவின் ஸ்மார்ட்போனை அவர் பயன்படுத்தியுள்ளார்.

சிறுவன் மொபையில் அதிகம் நேரம் செலவிடுவதைக் கண்டு பெற்றோர் கண்டிக்கும் போது,ஆன்லைனில் படிப்பதாக அவர் பொய் கூறி பெற்றோரை சமாளித்து தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.கேமில் புதிய அப்கிரேடுகளை செய்யவும் அவர் தனது பெற்றோரின் மூன்று வங்கிக் கணக்குகளை பயன்படுத்திய சிறுவன் 16 லட்சத்தை செலவழித்துள்ளார்.பணம் எடுத்ததற்கான மெசேஜ் பெற்றோர்களுக்கு தெரியாமல் இருக்க உடனுக்குடனே மெசேஜை டெலீட் செய்துள்ளார்.

பணம் குறைவது ஒரு கட்டத்தில் தெரியவந்த பெற்றோர்கள் டிரன்சாக்சன் ஹிஸ்டரியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.அரசு அலுவலரான சிறுவனின் தந்தை பணத்தை மீட்டுத்தர வேண்டும் என போலீசில் தகவல் தெரிவித்துள்ளார்.இருந்த
போதிலும் பணத்தை மீட்க இயலாது என போலீசார் தெரிவித்துவிட்டனர்.

இதையடுத்து, பணத்தின் அருமை, உழைப்பின் அருமை தெரியவேண்டும் என்பதற்காக சிறுவனை இருசக்கர வாகனங்கள் சீர் செய்யும் மெக்கானிக் கடையில் தந்தை கோபத்தில் சேர்த்துள்ளார்.

பெற்றோர்கள் தனது குழந்தைகளிடம் ஸ்மார்ட் போனை கொடுக்கும்போது அவர்கள் அதில் அதிகம் என்ன செய்கிறார்கள் என்பதனை அடிக்கடி கவனிக்க வேண்டும் இல்லையெனில் உழைத்த காசுகள் இதுபோன்ற கேம்காக வீணடிக்கப்படுவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Previous articleதமிழகம் முழுவதும் நாளை பொது ஊரடங்கு; குறிப்பிட்ட இதற்கு மட்டும் அனுமதி உண்டு!
Next articleகொரோனாவை அடுத்து மிக பெரிய ஆபத்து சென்னைக்கு காத்திருக்கிறது!பேரழிவு ஏற்பட வாய்ப்பு