செம ட்விஸ்ட்.. அதிமுக தவெக முடிவுக்கு வரும் மெகா கூட்டணி.. ஆதவ் அர்ஜூனா போட்ட ஸ்கெட்ச்!!

ADMK TVK: சில மாதங்களுக்கு முன்பு விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆப் காமன் நிறுவனம் இணைந்து எல்லோருக்குமான தலைவன் என்ற நிகழ்ச்சியை அம்பேத்கருக்காக நடத்தியது. இதில் தவெக தலைவர் கலந்து கொண்டார். பெரும்பாலும் இந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பங்கேற்க இயலவில்லை. இது குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

அதே போல ஆதார் அர்ஜுனா அந்த நிகழ்ச்சியில் ஆளும் கட்சி குறித்து சரமாரியாக தாக்கி பேசினார். இவ்வாறு பேசியதற்கு விசிக கட்சியிலிருந்து அவரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். இதன் நடுவே அரசியல் களத்தில் விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா இணைய போவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் விஜய்யை அவரது வீட்டில் வைத்து சந்தித்துள்ளார். மேற்கொண்டு இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக நியமனம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பனையூர் வட்டாரம் கூறுகின்றது. இவ்வாறு இருக்கையில் மற்றொரு மாஸ்டர் பிளான் ஆதவ் அர்ஜுனா செய்து வைத்துள்ளாராம். அதாவது ஆதார் ஜூனா இடை நீக்கம் செய்ததும் அதிமுக வா? அல்லது தவெக வா? எங்கு செல்வார் என்ற கேள்வி இருந்து வந்தது.

தற்பொழுது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் இவர் விஜய்யுடன் தான் இணையப் போகிறார். மேற்கொண்டு அதிமுகவின் பந்தத்தையும் இதில் இணைக்க உள்ளாராம். அதேபோல தமிழக வெற்றிக் கழகமும் தற்பொழுது வரை அதிமுக குறித்து எந்த ஒரு எதிர்மறை கருத்தும் தெரிவிக்காமல் தான் இருந்து வருகிறது. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் துணை முதல்வர் பதவி மற்றும் 70 சீட் வரை வழங்க வேண்டும் என்று டீல் பேசி வருகிறார்களாம்.

ஆனால் எடப்பாடி தரப்பு 40 சீட் தான் தர முடியும் என்று வாதாடி வருகிறதாம். இது முடிவாகும் பட்சத்தில் அதிமுக தாவெக கூட்டணியை இணைத்ததற்கு முக்கிய காரணமாக ஆதவ் இடம் பெறுவார் என்று கூறியுள்ளனர்.