State

கொரோனாவை அடுத்து மிக பெரிய ஆபத்து சென்னைக்கு காத்திருக்கிறது!பேரழிவு ஏற்பட வாய்ப்பு

சென்னையில் 2015 ஆம் ஆண்டு பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவுகளை சென்னை மக்கள் சந்தித்தனர்.லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்தனர்.சிலர் இந்த வெள்ளப்பெருக்கால் மரணமடைந்தனர்.

இந்நிலையில் சென்னை ஐஐடியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் காலநிலை மாற்றம் திட்டத்தின் கீழ் கடலோர மாவட்டங்கள் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான அவசியம் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

சென்னை,திருவனந்தபுரம்,மும்பை, விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில் ஏற்படும் கால நிலை மாற்றத்தினால் வரும் ஆபத்து அதிலிருந்து வெளி வருவதற்கான திட்டத்தின் கீழ் ஐஐடியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் கடலோர உள்கட்டமைப்பு மீதான உத்திகள்,இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக எடுத்துகொண்டு ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

இந்த ஆராய்ச்சி முடிவில் 2015 ஆம் ஆண்டு பெய்த மழையை விட அதிகம் பெய்ய 10 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.233.9 சதவீத அளவுக்கு பெய்ய பெய்யப் போகும் மழையால் வெள்ளப்பெருக்கு போன்ற மிக பெரிய பாதிப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment