பாத்ரூம் டைல்ஸில் படிந்த அழுக்கு கறைகள் நீங்கி டைல்ஸ் கண்ணாடி போன்று பளிச்சிட இந்த குறிப்பை பின்பற்றுங்கள்!!

Photo of author

By Divya

நாம் அடிக்கடி பாத்ரூம் பயன்படுத்துவதால் பாசி,மஞ்சள் கறை மற்றும் அழுக்குகள் படிந்துவிடுகிறது.இதனால் பாத்ரூமில் கெட்ட வாடை வீசத் தொடங்குகிறது.பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள அழுக்கு மற்றும் கறைகள் நீங்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பேக்கிங் சோடா – நான்கு தேக்கரண்டி
2)டிஜர்ஜெண்ட் பவுடர் – நான்கு தேக்கரண்டி
3)சபீனா பவுடர் – இரண்டு தேக்கரண்டி
4)வினிகர் – இரண்டு தேக்கரண்டி
5)தண்ணீர் – ஒரு பக்கெட்

செய்முறை விளக்கம்:-

*முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் நான்கு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

*அடுத்து நான்கு தேக்கரண்டி டிஜர்ஜெண்ட் பவுடர் சேர்த்து நுரை வரும் வரை நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

*அடுத்ததாக இரண்டு தேக்கரண்டி சபீனா பவுடர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இரண்டு தேக்கரண்டி வினிகர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

*இந்த நீரை பாத்ரூம் முழுவதும் ஊற்றி அரை மணி நேரம் ஊறவிட வேண்டும்.பிறகு பிரஸ் பயன்படுத்தி பாத்ரூமை தேய்த்து கழுவ வேண்டும்.

*இப்படி செய்தால் பாத்ரூமில் இருக்கின்ற அழுக்கு மற்றும் கறைகள் அனைத்தும் நீங்கி பளிச்சிடும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)புளி – எலுமிச்சை அளவு
2)பேக்கிங் சோடா – இரண்டு தேக்கரண்டி
3)எலுமிச்சை தோல் கொதிக்க வைத்த நீர் – இரண்டு கப்

செய்முறை விளக்கம்:-

*எலுமிச்சை சாறு பயன்படுத்திய பிறகு இருக்கும் சக்கையை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

*பிறகு ஒரு கிண்ணத்தில் புளி போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைக்க வேண்டும்.இந்த புளி கரைசலை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து எலுமிச்சை தோல் கொதிக்க வைத்த தண்ணீரை அதில் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

*அடுத்து இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை அதில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து பாத்ரூம் முழுவதும் ஊற்றி 20 நிமிடங்கள் ஊறவிட வேண்டும்.

*பிறகு துடைப்பம் அல்லது பாத்ரூம் பிரஸ் கொண்டு தேய்த்து கழுவினால் அழுக்கு கறைகள் முழுமையாக நீங்கிவிடும்.