சுகர் இருப்பவர்கள் கோதுமை VS ராகி எதை சாப்பிடலாம்!! எப்படி சாப்பிட வேண்டும்??

Photo of author

By Janani

சர்க்கரை நோயாளிகளுக்கு கோதுமை மற்றும் ராகி நல்லது தான். ஆனால் அதனை சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யவும் வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ராகி மற்றும் கோதுமை நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது தான் அதற்காக தினமும் காபி மற்றும் டீக்கு பதிலாக ராகி கூலோ சத்துமாவு கஞ்சியோ எடுத்துக்கொள்ளக் கூடாது. அவ்வாறு எடுத்துக் கொண்டால் சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும் ஏனெனில் ராகி மாவை பயன்படுத்தி ராகி கூலோ அல்லது ராகி களியோ நாம் செய்யும்பொழுது அதில் ஜெலார்டினேஷன் என்ற செயல்பாடு நடக்கும்.

இந்த செயல்பாடு நமது உடல் நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ராகி மாவில் கூலோ, களியோ செய்து நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது தீமையை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக நாம் ராகி மாவை பயன்படுத்தி தோசை, இட்லி, புட்டு போன்ற உணவுகளாக எடுத்துக் கொள்வது நல்லது என்றும் கூறப்படுகிறது.

இதேபோல் கோதுமை மாவினை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கு சப்பாத்தி செய்யும் பொழுது எண்ணெய் பயன்படுத்தாமல் ட்ரை சப்பாத்தியாக எடுத்துக் கொள்வது நல்லது. கோதுமை மாவில் தோசை ஊற்றி சாப்பிடுவதும் நல்லது என்று கூறப்படுகிறது. கோதுமை கஞ்சி, கோதுமை களிகளை நீரிழிவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. நீரிழிவு நோயாளிகளுள் குளுட்டன் தொந்தரவு இருப்பவர்கள் கோதுமையை தவிர்ப்பது நல்லது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே சர்க்கரை நோயாளிகள் கோதுமை மற்றும் ராகி ஆகிய இரண்டையுமே அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. அதே போன்று சரியான முறையில் சமைத்து உண்பதும் அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கோதுமை மற்றும் ராகியில் அதிகபட்சமாக 250 முதல் 320 கலோரிகள் கிடைக்கும். நீங்கள் சமைக்கும் விதத்தில் இந்த கலோரிகளின் மதிப்பு அதிகரிக்கவும் செய்யும்.

எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு 100 முதல் 150 கிராம் கலோரிகள் கிடைத்தாலே போதுமானது. எனவே வாரத்தில் ஒருமுறை கோதுமை மற்றும் ராகியினை எடுத்துக் கொண்டாலே போதுமானது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.