நாம் தமிழர் சீமான் பெரியாரை அவதூறாக பேசிய காரணத்திற்காக ஆளும் கட்சி என தொடங்கி பெரியார் கழகம் வரை அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்கொண்டு அவர் வீட்டிற்கு எதிராக முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர். இது ஒரு புறம் இருக்க சீமானின் ஆதரவாளர்கள் அவரின் வீட்டின் முன்பே பாய் போட்டு படுத்து ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சாதியை சார்ந்த கட்சித் தலைவர் இது குறித்து ஆதரவு தெரிவிப்பது அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது.
ஒவ்வொரு கட்சியும் பெரியாரை கொள்கைக்கு என்று இடம் கொடுத்து தான் வைத்துள்ளனர். இது தவிர அவரின் சமத்துவத்தை பின்பற்றுவதில்லை. ஏன் அதனை திமுக-வே ஒரு போதும் மதிபதில்லை, அப்படி இருக்கையில் சாதிய தலைவர் இதற்கு ஆதரவு தெரிவித்து முட்டுக் கொடுத்து பேசுவது அவர்களின் தொண்டர்களிடையே அதிருத்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக இது குறித்து பொருட்படுத்தாமல் உள்ளது. அதேபோல இந்த கட்சி தலைவரும் இருக்கலாம் என தொண்டர்கள் எண்ணி வருகின்றனர். ஆனால் இவர் அரசியல் சார்ந்த விளம்பரத்திற்கு இப்படி தொடர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். முன்னதாகவே மேடை நாகரிகமின்றி அப்பா மகன் மல்லு கட்டியது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு அடுத்ததாக இந்த விவாகரம் அமைந்துள்ளது.