நக்கலைட்ஸ் யூடுயுப் சேனலின் இயக்கத்தில், மணிகண்டன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள குடும்பஸ்தன் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. திருமணத்திற்கு பிறகு நடக்கும் ஒரு ஆணின் வாழ்க்கை முறையை பற்றி எடுத்துரைக்கும் காமெடி கலந்த கதை. ஜனவரி 31 இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்று இருந்தது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு தங்களது வெற்றியை பதிந்துள்ளனர்.
அதில் பேசிய எழுத்தாளர் பிரசன்னா பாலச்சந்திரன் அவரது சினிமா வாழ்க்கையையும், யுடுயுப்பில் யூடுயூப்பர்களின் கடின உழைப்பு பங்கீட்டையும் பற்றி எடுத்துக் கூறியுள்ளார். சினிமாவில் கூட டிக்கெட் வாங்கி விட்டதற்காக அமர்ந்து படத்தை பார்த்து தான் ஆக வேண்டும். ஆனால் youtube அப்படி கிடையாது. அதில் ஃபாலோவர்ஸ் வர வைப்பது கடினம். அதைவிட கடினம் அவர்களை தக்க வைத்துக் கொள்வது. பத்து நிமிடம் வீடியோவில் மக்களை எண்டர்டெயின்மென்ட் பண்ண வேண்டும்.
மேலும் வீடியோ நன்றாக இல்லை என்றால் அவர்கள் ஸ்க்ரோல் செய்து சென்று விடுவார்கள் என்று யூடுயுப்பர்ஸின் நிலையை எடுத்துக் கூறியுள்ளார். எனவே யூடுயுப்பர்ஸை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அவர்களில் சினிமா கனவுடன் வேலை புரிபவர்கள் ஏராளம். அந்த வகை youtube மட்டும் யூடுயூப்பர்களின் உழைப்பை நாம் மதிக்க வேண்டும். இந்த youtube சேனல் ஆரம்பித்த புதுதில் நாங்கள் இருநூறு ரூபாய்க்கு ஒரு வீடியோ எடுக்கச் சொல்வோம். அது பஸ் செலவிற்கும், சாப்பாட்டுக்குமே சரியாகிவிடும் என்று அவர் தெரிவித்திருந்தார். மேலும் அப்பொழுது எங்களுடன் இணைந்து பணியாற்றிய தோழர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்து இருந்தார்.