TVK: தவெக கட்சியில் சாதிய பாகுபாடு பார்த்து நிர்வாகிகளை அமைப்பதாக பனையூரில் நிர்வாகிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொள்கைகளில் முக்கியமான ஒன்று சாதிய பாகுபாடு காணப்படாது என்பது தான். ஆனால் கட்சியில் சாதிய பாகுபாடு இருப்பதாக நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்திலேயே குமுறி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் நியமனமானது நடைபெற்று வருகிறது.
இது இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர் என்ற வகையில் அமைத்து வருகின்றனர். இந்த இடத்தில் தான் பிரச்சனையே ஆரம்பித்துள்ளது. கிழக்கு மாவட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு மேற்கில் மாற்றம் செய்து கொடுத்ததோடு, சாதி பார்த்து பொறுப்பாளர்களை அமைப்பதாக தெரிவித்துள்ளனர். பிசி, எம் பி சி மற்றும் பணம் இருப்பவர்கள் மட்டுமே போஸ்டிங் பெற முடியும் என்றும் கூறியுள்ளனர்.
எத்தனை நாட்கள் வேலை செய்தது அனைத்தும் வீண் என்றும் இந்த போஸ்டிங்காக தான் இவ்வளவு நாட்கள் காத்திருந்தோம். ஆனால் தங்களை முன் நிறுத்தவில்லை என பனையூர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பேட்டி அளித்து வருகின்றனர். அதேபோல எஸ்சி நபர்கள் யாரும் நிர்வாகியாக இருக்க தகுதி இல்லை என்றும் கூறுகின்றார்களாம். இவை அனைத்தும் தலைமையிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை, இதற்கு கட்டாயம் நீதி கிடைக்க வேண்டும் என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.