பிடித்த பெண்களை எல்லாம் திருமணம் செய்த நடிகர்!! உண்மையில் அவருக்கு எத்தனை மனைவிகள் தெரியுமா.. ராதாரவி!!

Photo of author

By Gayathri

திராவிட கழகத்தின் மீது பற்று கொண்டு பெரியாரை பின்பற்றி வந்த நடிகர் எம் ஆர் ராதா அவர்கள் பல நாடகங்களில் புரட்சிகரமான கருத்துக்களை வெளிப்படுத்தியவர். அவருடைய நடிப்பில் வெளியான ரத்தக்கண்ணீர் திரைப்படம் ஆனது மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனால் இவரை ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதா என்று அழைக்க தொடங்கினர்.

இவர் எப்பொழுதுமே இந்தியாவை வெளிநாட்டோடு ஒப்பிட்டுக் கூறும் பழக்கமுடையவராகவே திகழ்ந்து வந்திருக்கிறார். அதிக கோவ குணம் கொண்ட இவர் எப்பொழுது தனக்கு கோபம் வந்தாலும் துப்பாக்கியை எடுத்து விடுவாராம். அவ்வாறாக தான் ஒரு நாள் துப்பாக்கியை எடுத்து எம்ஜிஆரை சுட்டு சிறைக்கு சென்றார் என்பது நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.

இவருக்கு 5 மனைவிகள் உள்ளனர் என்றும் தன்னுடைய சொந்த வாழ்வில் அவர் பல பெண்களை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்றும் வெளியான தகவலை அடுத்து, எம் ஆர் ராதாவின் வாரிசான நடிகர் ராதாரவி அவர்கள் youtube சேனல் ஒன்றுக்கு பதிலளித்திருக்கிறார்.

Youtube சேனலுக்கு எம்.ஆர். ராதாவின் வாரிசான ராதாரவி அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-

என்னுடைய அப்பா எம் ஆர் ராதா அவர்கள் 5 மனைவிகளை திருமணம் செய்து கெத்தாக வாழ்ந்தார் என்று youtube சேனலில் போடப்பட்டுள்ளது. உண்மையில் அந்த youtube சேனலுக்கு தெரியாது என்னுடைய தந்தைக்கு 5 மனைவிகள் இல்லை அதற்கும் அதிகமான மனைவிகள் உள்ளன என்று என தெரிவித்திருக்கிறார்.

மேலும் தன் தந்தை குறித்து தெரிவித்த அவர், என்னுடைய அப்பாவிற்கு எந்த பெண் மீது ஆசை வந்தாலும் உடனடியாக அவரை திருமணம் செய்து கொள்வார் என்றும் அவர்களுக்கு தங்களுடைய சொத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு சொத்தை எழுதிக் கொடுத்து விடுவார் என்றும் தெரிவித்திருக்கிறார். யாரை திருமணம் செய்தாலும் என்னுடைய தந்தை யாரையும் ஏமாற்ற மாட்டார் என்றும் ராதாரவி அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.