ADMK TVK: அதிமுக தவெக கூட்டணியை இணைக்கும் வேலையை ஆதவ் அர்ஜுனா செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தவெக அதிமுக கூட்டணி உறுதியாகும் என்ற அறிவிப்பானது விரைவில் வெளிவரும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆரம்ப கட்டத்தில் ஆதவ்அர்ஜுனா விஜய்யுடன் இணையப் போகிறார் என்று அறிவிப்பு வெளியான பொழுது இல்லை, என மறுத்து வந்தனர். அதே போல தான் அதிமுகவுடன் விஜய் கூட்டணி என்பது உறுதியாக வில்லை என கூறினாலும் சட்டமன்றத் தேர்தலுக்குள் அதற்குரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
பாஜக தான் தவெக-விற்கு எதிரி என்று கூறியதோடு, பாமக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குறித்து எதிர்மறை கருத்துக்கள் இதுவரை முன் வைக்கவில்லை. இவையனைத்தும் கூட்டணிக்காக சிகப்பு கம்பளத்தை அவர்களுக்கு விரித்து உள்நுழைய வழி விடுவது போல் உள்ளது. அப்படி இந்த வாய்ப்பை அதிமுக பாமக மேலும் நாதக உள்ளிட்ட கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளுமா என்ற கேள்வி தான் தற்பொழுது உள்ளது?
அந்த வகையில் அதிமுகவுடன் மிகவும் மும்முரமான பேச்சுவார்த்தை நடப்பதாகவும், இவர்கள் கூட்டணி இணைந்தால் கட்டாயம் விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பெருமளவில் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்து வருகிறாராம்.
கட்சிக்காக பல வருடங்களாக உழைத்திருக்கும் நிர்வாகிகளுக்கு பதவி வழங்காமல் தற்பொழுது வந்த சினிமா நட்சத்திரத்தின் கட்சியை இணைத்து பதவி வழங்கினால் எப்படிப்பட்ட விமர்சனங்களெல்லாம் வைக்கப்படும் என்பது குறித்து ஆலோசனை செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேற்கொண்டு ஆதவ் அர்ஜுனா தவெக-வில் இணைந்ததால் இவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக இருப்பார் என்றும் கூடிய விரைவில் இதற்குரிய அறிவிப்பு வெளியாகும் என பனையூர் வட்டாரம் கூறுகின்றது.