இலவசமாக பாடலுக்கு இசையமைத்து கொடுத்த இளையராஜா!! மற்றொரு முகம் பற்றி தெரியுமா!!

Photo of author

By Gayathri

50 ஆண்டுகளாக இசை உலகத்தை தன்னகத்தே கொண்டு ஆட்சி செய்து கொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா. இவரை பெரும்பாலும் பலர் தவறாகவே புரிந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு தவறாக புரிந்து கொண்டிருப்பவர்கள் இவரை தலைகனம் பிடித்தவன், அதிக திமிர் மற்றும் கர்வத்தோடு இருப்பவர் கோவக்காரர் என பல பெயர்களை சொல்லி அழைப்பதுண்டு.

ஆனால் பலரோ இவருடைய பாடல்களுக்கு அடிமையாக உள்ளனர் என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட பாடல்களை சினிமா திரையுலகில் கொடுத்தவர் தான் இசைஞானி இளையராஜா.

இவர் குறித்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா அவர்கள் பேசியிருப்பதாவது :-

இளையராஜாவிற்கு அதிக கோபம் உண்டு தலைகனம் உண்டு திமிரு பிடித்தவர் தற்பெருமையை போற்றுபவர் என அனைவரும் சொல்லுகின்ற நேரம் தவிர இளையராஜாவிற்கு இவை அனைத்திற்கும் ஆன தகுதி உண்டு என்பதை யாரும் சிந்திப்பதில்லை என தெரிவித்திருக்கிறார்.

மேலும் பேசிய அவர், இளையராஜா பணத்தாசை பிடித்தவர் என்று பலரும் கூறுகின்றனர். சமீபத்தில் தன்னுடைய பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு நோட்டீஸ் விட்டது அனைவரிடமும் கோபத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஆனால் உண்மையில் இளையராஜா அவர்கள் பல பேருக்கு இலவசமாக பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ஒரு சமயம் ஒருவரிடம் பணம் இல்லை என தெரிந்து இலவசமாக பாடல் இசைத்து கொடுத்த இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் தன்னுடைய மனைவியின் தாலியை சம்பளமாக கொடுப்பதற்கு எடுத்து வந்திருக்கிறார். இதனை கண்ட இளையராஜா அவர்கள் அந்த தயாரிப்பாளரை தன்னுடைய வீட்டை விட்டு விரட்டி அடித்திருக்கிறார். இளையராஜாவின் முழு மனம் குறித்து தெரியாதவர்கள் அவரை தவறாக புரிந்து கொள்வதில் தவறில்லை என்றாலும் ஒருவர் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை யோசித்து பேச வேண்டுமென தெரிவித்திருக்கிறார்.