நடிப்பில் பல சாதனைகளை புரிந்து தமிழக மக்களால் நடிகர் திலகம் என்று அன்போடு அழைக்கப்படுபவர் சிவாஜி கணேசன் அவர். இவர் எந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்டாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்க கூடியதில் வல்லவர்.
இது போன்ற பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிவாஜி கணேசன் அவர்களை பல நடிகைகள் ஒருதலையாக காதலித்ததுண்டு என கூறப்படுகிறது. அவ்வாறு ஒரு நடிப்பை சிவாஜி கணேசன் அவர்களை காதலித்ததோடு அவர் படத்திற்காக கட்டிய தாலியை உண்மையில் காட்டியதாக எண்ணி தன்னுடைய கழுத்திலேயே சுமந்து வந்துள்ளார். இது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
சிவாஜியுடன் 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்தவர் நடிகை பத்மினி ஆவார். இவர் சிவாஜியுடன் பல படங்களில் நடித்ததுடன் மட்டுமல்லாது இவர்களுடைய ஜோடியானது ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது. அதனால் இவர்களுடைய காலத்தில் இவர்கள் இருவரையும் இணைத்து பல காதல் கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் இருந்திருக்கிறது. உண்மையில் நடிகை பத்மினி அவர்களும் சிவாஜியை ஒரு தலையாக காதலித்து வந்திருக்கிறார்.
எப்படி இருக்கக் கூடிய சூழ்நிலையில் ஒரு படத்திற்காக நடிகர் சிவாஜி அவர்கள் பத்மினியின் கழுத்தில் தாலியை கட்டவே அதனை பத்மினி அவர்கள் நிஜ திருமணமாக எண்ணி பல மாதங்கள் தன்னுடைய கழுத்திலேயே சுமந்து இருக்கிறார். இதனை அறிந்த பத்மினியினுடைய சகோதரி அதனை தன் தாயிடம் கூறவே பத்மினியின் தாயார் அவருக்கு அறிவுரை வழங்கி அதன் பின் அந்த தாலியை கழட்டியுள்ளார்.
சிவாஜி அவர்கள் அப்பொழுது யாரையும் காதலிக்கவில்லை காரணம் அவர் திருமணத்திற்கு பின்பு தான் நடிகராகவே மாறியிருக்கிறார். இறுதியில் 1961ம் ஆண்டு நடிகை பத்மினி அவர்களுக்கு திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.