உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் பழங்களின் டாப் இடத்தில் இருப்பது வாழைப்பழம் தான்.இதில் எக்கச்ச ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.கால்சியம்,பொட்டாசியம்,வைட்டமின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
வாழைப்பழம் போன்றே அதன் தோலும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.ஆன்டி-ஆக்ஸிடெண்ட்,பேப்டி ஆசிட் நிறைந்து காணப்படும் வாழைப்பழ தோல் அழகு சாதன பொருளாக திகழ்கிறது.
முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள்:
வாழைப்பழத் தோலை அரைத்து பாலுடன் கலந்து முகத்தில் பூசினால் பருக்கள்,கரும்புள்ளிகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
சரும மருக்கள்:
உடலில் அசிங்கமாக உள்ள மருக்களை அகற்ற வாழைப்பழத் தோலை பயன்படுத்தலாம்.இந்த வாழைப்பழ தோலை அரைத்து மருக்கள் மீது பூசினால் அவை ஓரிரு தினங்களில் காய்ந்து உதிர்ந்துவிடும்.
தோல் அரிப்பு மற்றும் எரிச்சல்:
சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வாழைப்பழத் தோலில் தீர்வு இருக்கிறது.வாழைப்பழத் தோலை அரைத்து சருமத்தில் அப்ளை செய்து குளித்து வந்தால் தோல் அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.
பல் கறைகள்:
பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி பளிச்சிட பல் துலக்கிய பிறகு வாழைப்பழத் தோலை கொண்டு தேய்க்கலாம்.
வயிறு உப்பசம்:
வாழைப்பழத் தோலை நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பருகினால் வயிறு உப்பசம் குணமாகும்.
தூக்கமின்மை:
தினமும் இரவு வாழைப்பழத் தோல் தேநீர் பருகி வந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
முடி உதிர்வு:
வாழைப்பழத் தோலை அரைத்து தலைக்கு அப்ளை செய்து குளித்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
கருவளையம்:
கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறைய வாழைப்பழத் தோலை அரைத்து அப்ளை செய்யலாம்.