வறண்ட பனி காலத்தில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் கூட தோல் வறட்சி,தோல் சுருக்கம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.இந்த பனி காலத்தில் தோல் வறட்சியில் இருந்து மீண்டு சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வதற்கான வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)வாழைப்பழம் – ஒன்று
2)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் ஒரு வாழைப்பழத்தை எடுத்து தோலை நீக்கிவிட வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
பிறகு ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை மட்டும் தனியாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03:
பிறகு மிக்சர் ஜாரில் வாழைப்பழத் துண்டு மற்றும் கற்றாழை ஜெல்லை போட்டு க்ரீம் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 04:
அதன் பிறகு இந்த க்ரீமை ஒரு கிண்ணத்தில் போட்டு கால் தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 05:
பின்னர் இந்த க்ரீமை சருமத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு பிறகு குளிக்க வேண்டும்.இப்படி செய்தால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)பாதாம் ஆயில் – ஒரு தேக்கரண்டி
2)வைட்டமின் ஈ மாத்திரை – ஒன்று
3)வாழைப்பழம் – ஒன்று
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
அடுத்து இந்த வாழைப்பழ பேஸ்டை கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெயை அதில் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03:
இதை சருமத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து குளித்தால் தோல் சுருக்கம்,தோல் வறட்சி குணமாகும்.
அதேபோல் சருமத்தில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து குளித்தாலும் சரும வறட்சி,தோல் சுருக்கமாதல் போன்ற பிரச்சனைகள் முழுமையாக குணமாகும்.போதிய அளவு தண்ணீர் குடிப்பதால் சருமம் வறண்டு போவதை முற்றிலும் கட்டுப்படுத்தலாம்.