2026 சட்டமன்ற தேர்தல்: எலக்க்ஷனிலிருந்து விலகிய எடப்பாடி .. பிரச்சாரத்தை ஆரம்பித்த துணை முதல்வர்!!

Photo of author

By Rupa

DMK: சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தை உதயநிதி ஸ்டாலின் நேற்று ராமநாதபுர மாவட்டத்தில் தொடங்கி வைத்துள்ளார்.

2026 யின் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கிவிட்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதாவது சட்டமன்ற தேர்தல் வருவதற்கு தற்பொழுது ஒரு ஆண்டு காலம் இருக்கும் நிலையில் தரபோதிலிருந்தே தனது கட்சி சார் பிரச்சாரத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் துவக்கி வைத்துள்ளார். அதன்படி நேற்று திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் உதயநிதி கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

மேற்கொண்டு அவர் பேசுகையில், பெண்கள் சார்ந்த திட்டங்கள் வகுத்து அவர்களை பாதுகாப்பதையே மு க ஸ்டாலின் அதிகளவு கவனம் செலுத்தி வருகிறார். மேற்கொண்டு நீட் தேர்வு ரத்து செய்வது தான் எங்கள் தலையாக நோக்கம் அது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆளுநரானவர் மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கும் தபால்காரராக செயல்பட்டு வருகிறார்.

சட்டமன்ற கூட்டத்தொடரை வெளிநடப்பு செய்து வாக்கிங் செல்லும் கவர்னர் இவர் மட்டும் தான். அதேபோல தற்போது நடந்து முடிந்த பட்ஜெட் தாக்கலில் தமிழ்நாடு ரீதியாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் மத்திய அரசை எதிர்க்க வேண்டும். அதே சமயம் தேர்தல் சமயங்களில் மட்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் வருகை தந்த பிரதமர் அதன் பிறகு இந்த பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஈரோடு இடைத்தேர்தலில் எட்டாவது முறையாக தோற்று விடுவோம் என்பதற்காகவே போட்டியிடாமல் விலகிக்கொண்டார். வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து மீண்டும் ஸ்டாலின் அவர்களை முதல்வராக அமர வைக்க வேண்டும். இதற்காக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் தங்களது உழைப்பை முழுமூச்சுடன் போட வேண்டும். அதேபோல கடந்த மக்களவை தேர்தலில் இந்த இராமநாதபுரம் மாவட்டத்தில் தான் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினேன் அந்த வகையில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் தேர்தல் முன்னோடியாக இந்த நாளில் தொடங்கி வைப்பதாக கூறினார்.