நீங்களும் ஹீரோதான் திரைப்படத்தில் நடிகை சில்க் ஸ்மிதா நடித்ததன் மூலம் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் வி சேகர் உடன் இணைந்தார். அதன்பின் இருவரும் இணைந்து வேலை பார்க்க படங்கள் சில. இந்த படம் எடுக்கப்பட்ட தருணத்தில் நடந்த சில சுவாரசியமான தகவல்களை இயக்குனர் வி.சேகர் அவர்கள் பகிர்ந்திருக்கிறார்.
சில்க் ஸ்மிதா குறிப்பு இயக்குனர் பகிர்ந்த தகவல்கள் பின்வருமாறு :-
ஒரு கிராமத்திற்கு படப்பிடிப்புக்காக சில்க் ஸ்மிதாவை அழைத்துச் சென்ற பொழுது அவரை ஒரு வீட்டில் தங்க வைத்து விட்டு அசிஸ்டன்ட் டைரக்டர் மேனேஜர் என அனைவரும் இணைந்து ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்பொழுது ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் அனைவரும் வந்து டைரக்டர் யார் என கேட்டு தங்களுடன் கலந்து பேசிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
பேச ஆரம்பித்த சில நேரங்களிலேயே ஊரில் உள்ள பணக்காரர்கள் சில்க் ஸ்மிதாவிற்கு பேமென்ட் எவ்வளவு என கேட்க இயக்குனரோ சரி ஒரு வேலை படத்துல நடிக்கிறதுக்கு தான் எவ்வளவு என்று கேட்கிறார்களோ சரி ஒரு வேலை படத்துல நடிக்கிறதுக்கு தான் எவ்வளவு என்று கேட்கிறார்கள் போல் இருக்கிறது என நினைத்ததாக தெரிவித்தார். அதன்பின் தான் இவர்கள் எதற்காக கேட்கிறார்கள் என்பதை உணர்ந்து என்ன மாமா வேலைக்கு கூப்பிடுகிறார்கள் என அசிஸ்டன்ட் டைரக்டர்களிடம் கோபமாக கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்று இருக்கிறார்.
அதன் பின்னர் இயக்குனரின் உடைய மேனேஜர் மூலமாக மீண்டும் வந்து இது குறித்து கேட்டதற்கு மேனேஜரையும் தான் திட்டி அனுப்பி விட்டதாக இயக்குனர் வி சேகர் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இவை அனைத்தையும் வைத்து நிழலுக்கும் நிஜத்துக்கும் உள்ள ஒரு வித்தியாசத்தை பற்றி தன்னுடைய படத்தில் கூறியதாக இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.
இந்த சூழலில் நடிகை சில்க் ஸ்மிதா அவர்கள் தன்னிடம் வந்து நீங்க மட்டும் ஏன் சார் அனைவரிடத்திலும் சகஜமாக பழகுகிறீர்கள் என கேட்டதாகவும் பொதுவாக நான் எந்த அறையில் தங்குகிறேனோ அதற்கு பக்கத்து அறையில் டைரக்டர் அல்லது ப்ரொடியூசர் ரூம் எடுத்து தங்குவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால் நீங்கள் மட்டும் அப்படி இல்லை ஏன் உங்களுக்கு அந்த மாதிரியான எண்ணம் இல்லையா என சில்க் ஸ்மிதா அவர்கள் கேட்டது இயக்குனரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
அதற்கு சிரித்தவாறு இயக்குனர் வீட்டில் என்னுடைய மனைவி இருக்கிறார் அவரை தவிர மற்ற அனைவரையும் நான் சகோதரி மாதிரி தான் நினைக்கிறேன் என தெரிவித்து சென்ற பின் தன்னை எங்கு சென்றாலும் சில்க் ஸ்மிதா அவர்கள் கையெடுத்து கும்பிடுவதாக இயக்குனர் தெரிவித்து இருக்கிறார்.