இந்த எண்ணெயை சூடாக்கி வயிற்றில் தேய்த்தால்.. தொப்பை கொழுப்பு கரைந்துவிடும்!!

Photo of author

By Divya

இன்று பலரும் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்றாக உடல் பருமன் உள்ளது.தரமற்ற உணவுகள்,சோம்பேறி வாழ்க்கை முறையால் உடலில் அதிகப்படியான கொழுப்பு படிந்து பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.

உடல் எடையை குறைக்க கடுமையான உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டாலும் எல்லா நேரத்திலும் அது பலனளிக்குமா என்றால் சந்தேகம் தான்.இந்த டயட்டுடன் சில விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து பிட்டாக இருக்கலாம்.

சரியான உணவுக் கட்டுப்பாடு,நிம்மதியான தூக்கம்,உடல் உழைப்புடன் கடுகு எண்ணெய் மசாஜை செய்து வந்தால் உடல் கொழுப்பு சீக்கிரம் கரைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)கடுகு எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
2)தாளிப்பு கரண்டி – ஒன்று

செய்முறை விளக்கம்:-

1.முதலில் நீங்க சுத்தமான கடுகு எண்ணெயை வாங்கிக் கொள்ள வேண்டும்.இந்த கடுகு எண்ணெயை கொண்டு தொப்பையை கரைக்கும் ரெமிடி செய்ய வேண்டும்.

2.அதற்காக ஒரு தாளிப்பு கரண்டி அல்லது சிறிய வாணலி ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் இரண்டு தேக்கரண்டி அளவு கடுகு எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து ஒரு நிமிடம் சூடுபடுத்த வேண்டும்.

3.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இந்த எண்ணெய் வெது வெதுப்பான பதம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.பிறகு படுத்துக் கொண்டு தொப்புள் பகுதியில் இந்த எண்ணெயை ஊற்றி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

4.பிறகு உடற்பயிற்சி,நடைப்பயிற்சி அல்லது வீட்டு வேலைகளை செய்ய வேண்டும்.இந்த எண்ணையை அப்ளை செய்த பிறகு உடலில் இருந்து வியர்வை வெளியேறும் படியான வேலைகளை செய்ய வேண்டும்.இதை தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் தொப்பை கொழுப்பு கரைந்துவிடும்.

5.அதேபோல் தொடை,கை மற்றும் கால்களில் தொங்கும் சதைகள் மீது இந்த கடுகு எண்ணெயை அப்ளை செய்து வந்தால் அவ்விடத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும்.