நாம் எல்லா பருவ காலங்களிலும் நம் சரும பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும்.சருமத்தை ஆரோக்கியமான முறையில் பராமரித்து வந்தால் தான் வயதான பிறகும் இளமை தோற்றத்துடன் நாம் வாழ முடியும்.
சரும நோய்கள்:
*தேமல்
*கரும்புள்ளி
*பருக்கள்
*மங்கு
*சரும சுருக்கம்
*சருமத் துளை
சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை சந்திக்காமல் இருக்க இயற்கையான பொருட்களை கொண்டு பொடி தயாரித்து குளியல் பொடியாகவும்,பேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.கெமிக்கல் பொருட்களுக்கு மாற்று இந்த இயற்கை பொடியாகும்.சரும ஆரோக்கியத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலனை பெறுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)கஸ்தூரி மஞ்சள் கிழங்கு – இரண்டு
2)பூலாங்கிழங்கு – 100 கிராம்
3)ஆவாரம் பூ – கால் கப்
4)பாசிப்பருப்பு – 50 கிராம்
5)கடலை பருப்பு – 50 கிராம்
6)வெட்டி வேர் – கால் கைப்பிடி
7)கோரைக்கிழங்கு – 50 கிராம்
8)ரோஜா மொட்டு – கால் கப்
9)வசம்பு – ஒரு துண்டு
செய்முறை விளக்கம்:-
**முதலில் மேலே குறிப்பிட்டுட்டுள்ள பொருட்களை கடையில் வாங்கிக் கொள்ள வேண்டும்.பிறகு இவற்றை வெயில் படும் இடத்தில் பரப்பி ஒன்று முதல் இரண்டு மணி நேரம் காய வைக்க வேண்டும்.
**பிறகு அடுப்பில் வாணலி வைத்து பாசிப்பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இவற்றை நன்றாக ஆறவிட வேண்டும்.
**பின்னர் காய வைத்த பொருட்கள் மற்றும் வறுத்து ஆறவைத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
**இந்த பொடியை ஒரு ஸ்டோரேஜ் கன்டைனரில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடி தேவையான அளவு எடுத்துக் கொண்டு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக்கி உடலில் பூசி குளித்து வந்தால் தேமல்,கரும்புள்ளிகள்,மங்கு,கரும் புள்ளிகள் அனைத்தும் நீங்கி சருமம் ஜொலிக்கும்.
**இந்த பொருட்களும் வேப்பிலை,பச்சை கற்பூரம்,சந்தனம் சேர்த்துக் கொண்டால் உடலில் வெளியேறும் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படும்.அதேபோல் துளசி,பூலாங்கிழங்கு போன்றவற்றை சேர்த்துக் கொண்டால் சரும ஆரோக்கியம் மேம்படும்.