தற்பொழுது உள்ள பொருளாதார சூழலில் சிக்கனம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் அவசியமான ஒன்றாக உள்ளது.விலைவாசி உயர்வால் ஒரு ரூபாய் பொருளாக இருந்தால் யோசித்து செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் தான் அனைவரும் உள்ளோம்.
சிலர் பல்வேறு ட்ரிக்ஸ் மூலம் பணத்தை மிச்சம் செய்வர்கள்.அதேபோல் வீட்டில் இருக்கின்ற வேஸ்ட் பொருட்களை திரும்பவும் ஏதேனும் ஒரு வழியில் பயன்படுத்தும் பழக்கத்தை பலரும் கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில் பூரி,போண்டா,பஜ்ஜி போன்ற பலகாரம் சுட்ட எண்ணெய் இருந்தால் அதை நாம் பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுத்தி பணத்தை சேமிக்கலாம்.
1)வீட்டில் கரப்பான் பூச்சி,எலி,பூச்சி தொல்லை இருந்தால் அதை விரட்டி அடிக்கும் ஸ்ப்ரேவாக சுட்ட எண்ணெயை பயன்படுத்தலாம்.அதற்கு முதலில் ஒரு ஸ்ப்ரே பாட்டில் எடுத்து ஒரு தேக்கரண்டி சுட்ட எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி மண்ணெண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.இதை பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அவற்றின் தொல்லை ஒழியும்.
2)வீட்டு கதவு மற்றும் ஜன்னல்களை பளபளப்பாக்க இந்த சுட்ட எண்ணெயை பயன்படுத்தலாம்.அதற்கு முதலில் சிறிதளவு சுட்ட எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு காட்டன் துணியில் இந்த சுட்ட எண்ணெயை அப்ளை செய்து மரக் கதவு மற்றும் மர ஜன்னல் மீது அப்ளை செய்ய வேண்டும்.இப்படி செய்தால் பூச்சி அரிப்பது தடுக்கப்படும்.
3)கதவு மற்றும் ஜன்னல் தாழ்பாள் துருபிடித்தால் இந்த சுட்ட எண்ணெய் சிறிது அப்ளை செய்யலாம்.அதேபோல் கதவை திறக்கும் பொழுதும் மூடும் பொழுது ஒருவித சத்தம் எழுகிறது என்றால் அவ்விடத்தில் சிறிது சுட்ட எண்ணெய் அப்ளை செய்யலாம்.
4)வீட்டில் உள்ள மரப் பொருட்களை புதிது போன்று பளிச்சிட செய்ய சுட்ட எண்ணெயை அப்ளை செய்யலாம்.மரப் பொருட்களை சுட்ட எண்ணெய் கொண்டு பராமரிக்கலாம்.எனவே இனி சுட்ட எண்ணெய் இருந்தால் அதை கீழே ஊற்றாமல் இதுபோன்று ரீ-யூஸ் செய்யுங்கள்.இதனால் நமக்கு ஏகப்பட்ட பணம் மிச்சமாகும்.